'மனமொத்த மாறுதல்பெற விரும்பும் ஆசிரியர்கள், நாளை மறுதினம் முதல் 18ம் தேதி வரை, மாறுதல் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம்' என அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு ஏற்கனவே நடந்து முடிந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, மாவட்டத்திற்குள்ளும், மாவட்டம் விட்டு மாவட்டம், மனமொத்த மாறுதல் கோரும் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வும், அலகு விட்டு அலகு மாறுதல் வழியாக, பள்ளிக் கல்வித் துறைக்கு மாறுதல் கோருபவர்களுக்கான கலந்தாய்வும் நடக்க உள்ளது.இதன் அடிப்படையில் மாறுதல் பெற விரும்புவோர், அதற்கான விண்ணப்பத்தை, இ.எம்.ஐ.எஸ்., இணையதளத்தில், நாளை மறுதினத்தில் இருந்து, 18ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.மாறுதலுக்கான முன்னுரிமை பட்டியல், 19ம் தேதி வெளியிடப்படும். அதில் திருத்தம் மற்றும் முறையீடுகள் இருந்தால், 20 மற்றும் 21ம் தேதி பதிவேற்றம் செய்ய வேண்டும். வரும் 22ம் தேதி முன்னுரிமைப் பட்டியல் வெளியிடப்படும்.
வரும் 25ம் தேதியில், மனமொத்த மாறுதல் உள் மாவட்டம் மற்றும் வெளி மாவட்டத்திற்கான கலந்தாய்வு நடக்கும். 26ம் தேதி அலகு விட்டு அலகு மாறுதலுக்கான கலந்தாய்வு நடக்கும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.