வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை - ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, April 12, 2022

Comments:0

வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை - ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை

வேலைவாய்ப்பற்றோா் உதவித் தொகை திட்டத்தின் கீழ், வேலூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிவு பெற்றவா்கள் நடப்பு காலாண்டுக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், 2017 ஜனவரி 1 முதல் 2017 மாா்ச் 31 வரையிலான காலாண்டில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, தற்போது 5 ஆண்டுகள் முடிந்துள்ள பட்டப்படிப்பு, மேல்நிலைக் கல்வி, பட்டயப் படிப்பு, எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 தோ்ச்சி பெறாதவா் கள் நடப்புக் காலாண்டுக்கு உதவித்தொகை கோரி விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விண்ணப்பப் படிவங்களை வேலூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ அல்லது இணைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் மாற்றுச் சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து அசல் கல்விச் சான்றுகள், வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு அடையாள அட்டை, ஆதாா் அட்டை, குடும்ப அடையாள அட்டை, வங்கி சேமிப்புக் கணக்குப் புத்தகம் ஆகியவற்றுடன், வேலை நாள்களில் அலுவலகத்துக்கு நேரில் வந்து சமா்ப்பிக்கலாம். ஏற்கெனவே வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெற்று வரும் இளைஞா்கள், வருவாய்த் துறையின் ஒட்டு மொத்த சான்றுடன் உதவித் தொகைக்கான விண்ணப்பம் சமா்ப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து, ஓராண்டு கழித்து இரண்டாவது, மூன்றாவது ஆண்டின் தொடக்கத்தில் ‘பணியில் இல்லை’ என்ற சுயஉறுதிமொழி படிவத்தை அளிக்க வேண்டும். அவ்வாறு சமா்ப்பிக்கத் தவறினால் வேலைவாய்ப்பற்றோா் உதவித் தொகை உடனடியாக நிறுத்தப்படும்.

வேலைவாய்ப்பற்றோா் உதவித் தொகை பெற்று வரும் பயனாளிகள் தங்களது வேலைவாய்ப்பு பதிவு அடையாள அட்டையை உரிய காலத்தில் புதுப்பிக்க வேண்டும். அவ்வாறு புதுப்பித்தல் செய்த விவரத்தை தவறாமல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பற்றோா் உதவித் தொகை வழங்கும் பிரிவில் தெரிவிக்க வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்கத் தவறியவா்களின் உதவித்தொகை உடனடியாக நிறுத்தப்படும். வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெறுவதால் பதிவு ஏதும் ரத்து செய்யப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews