உலகத் தரம் வாய்ந்த கல்வி - ஆஸ்திரேலியா வழங்கும் சலுகைகள்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, April 20, 2022

Comments:0

உலகத் தரம் வாய்ந்த கல்வி - ஆஸ்திரேலியா வழங்கும் சலுகைகள்!

ஆஸ்திரேலியா வழங்கும் சலுகைகள்!

உலகத் தரம் வாய்ந்த கல்வி, கல்வி நிறுவனங்களுக்கான அங்கீகாரத் தரநிலைகள், தரமான பாடத்திட்டம், சர்வதேச மாணவர்களுக்கான ஆதரவு, படிப்புக்கு பிந்தைய வேலை வாய்ப்புகள் மற்றும் அதிகரிக்கும் வேலைவாய்ப்பு விகிதம் ஆகியவற்றிற்காக ஆஸ்திரேலியாவில் படிக்க விரும்பும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

28 ஆயிரம் மாணவர்கள்

குறிப்பாக, நவம்பர் 22, 2021 முதல் மார்ச் 18, 2022 வரையில் 28,785 இந்திய மாணவர்களது விசாக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாக, இந்தியா-ஆஸ்திரேலியா நாடுகளுக்கு இடையே சுமூகமான உறவு நீடிக்கிறது. ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனுக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையேயான நல்லுறவு, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் கல்வி துறைக்கு உத்வேகம் அளிக்கிறது. சமீபத்திய உச்சி மாநாட்டில் இரு பிரதமர்களும், ஆன்லைன் மற்றும் இருநாட்டு பரஸ்பர கற்றல் முறை, கூட்டுப் பட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை அங்கீகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சிறப்பு சலுகைகள்

சர்வதேச மாணவர்கள் மற்றும் பட்டதாரிகளுக்கு பல்வேறு புதிய விசா ஆதரவு திட்டங்களை ஆஸ்திரேலிய அரசாங்கம் வழங்குகிறது. அவற்றில், சர்வதேச மாணவர் விசா கட்டணம் மற்றும் கோவிட் விசா கட்டண தள்ளுபடி, ஆங்கில மொழி சோதனை தேர்வுகள் மற்றும் சுகாதார சோதனைகளுக்கான கூடுதல் நேரம், தற்காலிக பட்டதாரி விசா மற்றும் ஆஸ்திரேலியாவில் வேலை வாய்ப்பிற்கான விசா நீட்டிப்பு ஆகியவை அடங்கும். விசா சலுகைகள்

முழு தடுப்பூசி செலுத்திக் கொண்ட சர்வதேச மாணவர்கள், ஆஸ்திரேலியாவிற்கான அவர்களது விசா கட்டணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். பிப்ரவரி 1, 2020 முதல் மாணவர் விசா பெற்றவர்கள் மற்றும் கோவிட் தாக்கம் காரணமாக, விசா காலத்திற்குள் தங்கள் படிப்பை முடிக்க முடியாதவர்கள் ஆகியோரும் மாணவர் விசா விண்ணப்பக் கட்டணத்தை பெற தகுதியுடையவர்கள். கொரோனா காரணமாக, படிப்பு காலத்தை இழந்தவர்களுக்கு தற்காலிக கிராஜுவேட் விசா காலம் நீட்டிக்கப்படும்.

பணி நேர நீட்டிப்பு

ஆஸ்திரேலியாவில் பகுதிநேர வேலை செய்யும் சர்வதேச மாணவர்களுக்கு, பணிநேர கட்டுப்பாடு இல்லை. அதேநேரம், மாணவர்கள் போதுமான வருகைப் பதிவு மற்றும் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

மேலும் ஆஸ்திரேலியா கல்வி தகவல்களுக்கு https://www.studyaustralia.gov.au/india என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

- டாக்டர் மோனிகா கென்னடி, மூத்த வர்த்தக மற்றும் முதலீட்டு ஆணையர், ஆஸ்திரேலிய வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஆணையம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews