ஆசிரியர் பணி வாங்கி தருவதாக ரூ.3.25 கோடி மோசடி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, April 05, 2022

Comments:0

ஆசிரியர் பணி வாங்கி தருவதாக ரூ.3.25 கோடி மோசடி

In Dindigul district, Subramaniam, 53, of Chempatty, was arrested by the district crime branch police for allegedly defrauding 38 people of up to Rs 3.25 crore by offering him a job as a teacher.

Subramanian is accustomed to the Chennai General Secretariat officials. 46, a private school teacher from the same area, told Marimuthu that the government would buy jobs through them. Subramanian bought the teaching job and asked for Rs 12 lakh. Depending on it, Marimuthu gave Rs 9.80 lakh.

But Subramanian cheated by not buying the job. Subramanian threatened to kill Subramanian when he asked for his money back. Subramaniam was found to have defrauded 38 people to the tune of Rs 3.25 crore. He was arrested by the police. திண்டுக்கல் மாவட்டத்தில் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறி 38 பேரிடம் ரூ.3.25 கோடி வரை மோசடி செய்த செம்பட்டியை சேர்ந்த சுப்பிரமணியை 53, மாவட்ட குற்றபிரிவு போலீசார் கைது செய்தனர்.

சுப்பிரமணி தனக்கு சென்னை தலைமை செயலக அதிகாரிகள் பழக்கம் உள்ளது. அவர்கள் மூலம் அரசு பணி வாங்கி தருவதாக அதே பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் மாரிமுத்துவிடம் 46, கூறினார். ஆசிரியர் பணி வாங்கி தர சுப்பிரமணி ரூ.12 லட்சம் கேட்டார். அதை நம்பி மாரிமுத்து ரூ.9.80 லட்சத்தை கொடுத்தார்.

ஆனால் சுப்பிரமணி வேலை வாங்கி தராமல் மோசடி செய்தார். பணத்தை திருப்பி கேட்ட போது சுப்பிரமணி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.இதுகுறித்து எஸ்.பி., ஸ்ரீனிவாசன் மேற்பார்வையில் குற்றப்பிரிவு டி.எஸ்.பி., இமானுவேல் ராஜ்குமார், இன்ஸ்பெக்டர் வினோதா விசாரித்தனர். 38 பேரிடம் சுப்பிரமணி ரூ.3.25 கோடி வரை மோசடி செய்தது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews