வினாத்தாள் அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, April 09, 2022

Comments:0

வினாத்தாள் அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

The school education department has ordered the rooms where the 10th class, plus 2 question papers will be kept, with 24-hour police security and surveillance camera facilities.

Sethurama Verma, Director, Department of State Examinations, has sent a circular to the Primary Education Officers regarding the safe keeping of Class X, Plus 1 and Plus 2 General Examination question papers.

It said: There should be only one way to the room where the question paper is kept. The bundles containing the question papers should be unlocked, looking at the external information and locked securely. For that room, two officers should be appointed. The question paper room should be sealed with lacquer.

The 'seal' should be broken in the presence of the two officials and the question paper should be sent to the examination center. To ensure that the question papers do not become a 'league', 24-hour armed police security and 24-hour surveillance camera facilities should be provided. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வினாத்தாள் வைக்கப்படும் அறைகளுக்கு, 24 மணி நேரம் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன், கண்காணிப்பு கேமரா வசதியும் செய்ய, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வு வினாத்தாள்களை, பாதுகாப்பாக வைக்கும் முறை குறித்து, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, அரசு தேர்வு துறை இயக்குனர் சேதுராம வர்மா சுற்றறிக்கை அனுப்பிஉள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:வினாத்தாள் வைக்கப்படும் அறைக்கு, ஒரு வழி மட்டுமே இருக்க வேண்டும். வினாத்தாள்கள் அடங்கிய கட்டுகளை பிரிக்காமல், வெளிப்புற தகவல்களை பார்த்து, பாதுகாப்பாக பூட்டி வைக்க வேண்டும். அந்த அறைக்கு, இரண்டு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட வேண்டும்.வினாத்தாள் அறைக்கு அரக்கு 'சீல்' வைக்க வேண்டும்.

இரண்டு பொறுப்பாளர்கள் முன்னிலையில் 'சீல்' உடைக்கப்பட்டு, தேர்வு மையத்துக்கு வினாத்தாள் அனுப்பப்பட வேண்டும். வினாத்தாள்கள் 'லீக்' ஆகாமல் இருக்கும் வகையில், 24 மணி நேரம் ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு வசதியும், 24 மணி நேரமும் இயங்கும் கண்காணிப்பு கேமரா வசதியும் செய்யப்பட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews