பள்ளி மேலாண்மை குழு புரவலர்களுக்கு இடமில்லை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, April 04, 2022

Comments:0

பள்ளி மேலாண்மை குழு புரவலர்களுக்கு இடமில்லை

As a member of the Government School Management Committee, the feature of sponsorship has been removed.

The rule stated that a sponsor who made a donation to the school, along with the parents of the children and the local councilors, could be included.

Therefore, the feature that a sponsor may be a member has been removed from the rules and ordered by the State Director of Integrated Education Program Suthan. It has been suggested that retired teachers, NGOs and education activists may be included. அரசு பள்ளி மேலாண்மை குழு உறுப்பினராக, புரவலர் இடம் பெறும் அம்சம் நீக்கப்பட்டுள்ளது.அரசு பள்ளிகளின் பணிகளை மேம்படுத்தவும், அவற்றின் செயல்பாடுகளில் மக்களின் பங்களிப்பை ஏற்படுத்தவும், பள்ளி அளவில் மேலாண்மை குழு அமைக்க, பள்ளிக் கல்வி துறை உத்தரவிட்டது.

இதில், குழந்தைகளின் பெற்றோர், உள்ளாட்சி கவுன்சிலர்கள் ஆகியோருடன், பள்ளிக்கு நன்கொடை வழங்கும் புரவலர் ஒருவரும் இடம் பெறலாம் என, விதியில் கூறப்பட்டிருந்தது.ஆனால், புரவலர் பெயரில் அரசியல் கட்சியினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள், பள்ளி நிர்வாகத்தில் தலையிட வாய்ப்புள்ளதாக, பெற்றோர் மற்றும் ஆசிரியர் தரப்பில் கருதப்பட்டது.

எனவே, புரவலர் ஒருவர் உறுப்பினராக இருக்கலாம் என்ற அம்சத்தை, விதிகளில் இருந்து நீக்கி, ஒருங்கிணைந்த கல்வி திட்ட மாநில இயக்குனர் சுதன் உத்தரவிட்டுள்ளார். ஓய்வுபெற்ற ஆசிரியர், அரசு சாரா அமைப்பினர் மற்றும் கல்வி ஆர்வலர் இடம் பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews