தனி தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، أبريل 20، 2022

1 Comments

தனி தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு

ஹால் டிக்கெட் வெளியீடு

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தனி தேர்வர்கள், 'ஹால் டிக்கெட்'டுகளை, இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இதுகுறித்து, அரசு தேர்வு துறை இயக்குனர் சேதுராமவர்மா வெளியிட்ட செய்திக் குறிப்பு:அடுத்த மாதம் நடக்க உள்ள பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத, 'ஆன்லைன்' வழியாக விண்ணப்பித்த தனி தேர்வர்கள், இன்று பிற்பகல் 2:00 மணி முதல், www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில், ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.

பிளஸ் 1 அரியர் பாடங்களுக்கும், தற்போது பிளஸ் 2வும் எழுத உள்ள தனி தேர்வர்களுக்கு, ஒரே ஹால் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் விண்ணப்ப எண் மற்றும்நிரந்தர பதிவெண் மற்றும்பிறந்த தேதியை பதிவு செய்து, ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.மேலும், பத்தாம் வகுப்பு அறிவியல் பாட செய்முறை தேர்வுகள்

பொது தேர்வு அட்டவணை

வரும் 27ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடக்க உள்ளன. செய்முறை பயிற்சி வகுப்பு நடந்த பள்ளிகளில், செய்முறை தேர்வும் நடத்தப்படும்.தங்களுக்கான செய்முறை தேர்வு தேதியை, பள்ளி தலைமை ஆசிரியரை அணுகி, தேர்வர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஹால் டிக்கெட் இல்லாமல் தேர்வு எழுத அனுமதி இல்லை; பொது தேர்வு அட்டவணையை, www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

هناك تعليق واحد:

  1. Mirthika coaching centre... ug Trb... English study materials available.. for paper 2 passed candidates... books will be sent by courier.. 10 books.. around 2000 pages... contact 7010520979

    ردحذف

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة