குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் 3 நாள் தான் இருக்கு; இதுவரை 13 லட்சம் பேர் விண்ணப்பிப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الثلاثاء، أبريل 26، 2022

Comments:0

குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் 3 நாள் தான் இருக்கு; இதுவரை 13 லட்சம் பேர் விண்ணப்பிப்பு!

குரூப் 4 தேர்வு

குரூப் 4 தேர்வுக்கு இதுவரை சுமார் 13 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

VAO, JA என்று 7,301 பணியிடங்களுக்கு ஜூலை 24 எழுத்துத் தேர்வு.

தமிழக அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 7,382 பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்படும் குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை நடந்து வருகிறது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு இதுவரை சுமார் 13 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவையான ஊழியர்களை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission - TNPSC) மூலம் அரசு தேர்வு செய்து வருகிறது. திறமையான ஊழியர்களை கண்டறிய பல்வேறு போட்டித்தேர்வுகள் மற்றும் நேர்காணல் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகின்றனர். மேலும், 300 மதிப்பெண்களில் 90 பெற்றால் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் எனவும், தேர்வு காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதுவரை 13 லட்சம் பேர் விண்ணப்பிப்பு!

இந்நிலையில், பிப்ரவரி மாதம் குரூப் 2, குரூப் 2A தேர்வுக்காக தேதிகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி, மே 21 ஆம் தேதி முதன்மைத் தேர்வு நடைபெற உள்ளது. இதையடுத்து, குரூப் 4 தேர்வுக்கான தேதியை தேர்வாணையம் வெளியிட்டது. அறிவிப்பின்படி, குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்வு எழுத விரும்பும் விண்ணப்பதாரர்கள் மார்ச் 30 ஆம் தேதி முதல் ஏப்ரல் 28 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 7,382 பணியிடங்களை நிரப்ப குரூப் 4 தேர்வு நடைபெறுகிறது. இதில் சுமார் 81 இடங்கள் விளையாட்டு கோட்டா மூலம் நிரப்பபடும். மேலும், 274 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களும் அடங்கும்.

இந்நிலையில், TNPSC குரூப் 4 தேர்வுக்கு இதுவரையில் சுமார் 13 லட்சம் பேர் விண்ணப்பித்திருப்பதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் மூன்று நாட்களே உள்ளது. எனவே, தேர்வு எழுத விரும்பும் விண்ணப்பதாரர்கள் கடை தேதிக்கும் முன்னர் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். குரூப் 4 தேர்வு மூலம் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஒ), டைபிஸ்ட், ஸ்டேனோ டைபிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة