வகுப்பறையில் ஆசிரியரை மிரட்டிய அரசு பள்ளி மாணவர் சஸ்பெண்ட்..!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الخميس، أبريل 21، 2022

Comments:0

வகுப்பறையில் ஆசிரியரை மிரட்டிய அரசு பள்ளி மாணவர் சஸ்பெண்ட்..!!

A government school student who threatened a teacher in a classroom near Ambur in Tirupati district has been suspended. The suspension has been taken after the Governor and the Governor conducted an inquiry at Madhanur Government School. The student slept on the mat in the classroom without submitting the botany record note.

ஆசிரியரை மிரட்டிய அரசு பள்ளி மாணவர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே ஆசிரியரை மாணவர்கள் மிரட்டிய மாதனூர் அரசு பள்ளியில் வட்டாட்சியர், கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி தலைமையாசிரியர், சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் ஆம்பூர் வட்டாட்சியர் பழனி நேரில் விசாரணை மேற்கொண்டு வருகிறார். வாணியம்பாடி கோட்டாட்சியர் காயத்ரியும் தாக்க முயன்ற மாணவர்கள், வீடியோ எடுத்த மாணவரிடம் விசாரணை பள்ளி மாணவர் சஸ்பெண்ட்..!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே வகுப்பறையில் ஆசிரியரை மிரட்டிய அரசு பள்ளி மாணவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மாதனூர் அரசு பள்ளியில் கோட்டாட்சியர், வட்டாட்சியர் விசாரணை நடத்திய நிலையில் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. தாவரவியல் ரெக்கார்ட் நோட் சமர்பிக்காமல் பாய் போட்டு வகுப்பறையிலேயே மாணவர் தூங்கியுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே வகுப்பறையில் ஆசிரியரை மிரட்டிய அரசு பள்ளி மாணவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மாதனூர் அரசு பள்ளியில் கோட்டாட்சியர், வட்டாட்சியர் விசாரணை நடத்திய நிலையில் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. தாவரவியல் ரெக்கார்ட் நோட் சமர்பிக்காமல் பாய் போட்டு வகுப்பறையிலேயே மாணவர் தூங்கியுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தாவரவியல் ஆசிரியராகப் சஞ்சய் பணியாற்றி வருகிறார். இவர் வகுப்பறையில் இருந்த மாணவர்களிடம் ரெக்கார்ட் சமர்ப்பிக்கும் படி கேட்டுள்ளார். நேற்று வகுப்பறைக்கு சென்ற ஆசிரியர் சஞ்சய் ரெக்கார்டு நோட்டு சமர்ப்பிக்காத மாணவர்களை தட்டிக் கேட்டார். அப்போது சில மாணவர்கள் ஆசிரியரை தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றனர். மேலும் 2 மாணவர்கள் அவரது அருகே சென்று ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்தனர். மாணவர்களின் இந்த செயலால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர் வகுப்பறையை விட்டு வெளியேறினார்‌. இந்த நிகழ்வு பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து மாதனூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் வேலன் மாணவர்களிடம் விசாரணை நடத்தினார். இன்று காலை வாணியம்பாடி உதவி கலெக்டர் காயத்ரி சுப்பிரமணி மற்று ஆம்பூர் தாசில்தார் பழனி ஆகியோர் மாதனூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்று தலைமையாசிரியர் வேலனிடம் சம்பவம் தொடர்பாக கேட்டறிந்தனர். பின்னர் பள்ளி ஆசிரியரை அவதூறாக பேசி தாக்க முயன்ற மாணவர்களிடம் உதவி கலெக்டர் விசாரணை நடத்தினார். இந்நிலையில் விசாரணைக்கு பிறகு அந்த மாணவன் பள்ளியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة