பொதுத்தேர்வு மையங்கள் தயார்; விரிவான ஏற்பாடுகள் தீவிரம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, April 07, 2022

Comments:0

பொதுத்தேர்வு மையங்கள் தயார்; விரிவான ஏற்பாடுகள் தீவிரம்

In Udumalai Education District, centers have been set up for 10th, Plus 1 and Plus 2 students to write the general examination.

In Tamil Nadu, the state general elections will begin on May 5 for Plus 2 class, May 6 for Class X and May 10 for Plus 1 class. In turn, extensive arrangements are being made on behalf of the Directorate of State Elections. District wise details of students writing general examination have been prepared.

Thus, in the Udumalai Education District, for the tenth class, 19 centers; For Plus 1 class, 18 centers; 18 centers are set up for Plus 2 class. Accordingly, 5,066 students are scheduled to appear for the Class X examination, plus 1 for the 4,325 students and 4,150 for the Plus 2 examination.

Education officials said:

Extensive arrangements are being made for Class X, Plus 1, Plus 2 Government General Examinations. Work is underway to prepare the details of the Principal Supervisors, Exam Room Supervisors, Flying Squadron, Route Officers, Quiz Controllers.

Upon completion of this work, appointment orders will be issued. Surveillance cameras will be installed at the centers where the farewell letter will be placed and security will be strengthened. The answer sheets and stationery for the examination will be delivered to all the examination centers and will be delivered by the 9th. Thus, they said. உடுமலை கல்வி மாவட்டத்தில், 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதும் வகையில் மையங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில், பிளஸ் 2 வகுப்புக்கு மே 5, பத்தாம் வகுப்புக்கு மே 6, பிளஸ் 1 வகுப்புக்கு மே 10ம் தேதி, அரசு பொதுத்தேர்வுகள் துவங்குகிறது. இதையொட்டி அரசுத்தேர்வுகள் இயக்ககம் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மாவட்டம் வாரியாக பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியரின் விபரங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.

அவ்வகையில், உடுமலை கல்வி மாவட்டத்தில், பத்தாம் வகுப்பிற்கு, 19 மையங்கள்; பிளஸ் 1 வகுப்பிற்கு, 18 மையங்கள்; பிளஸ் 2 வகுப்பிற்கு 18 மையங்கள் அமைக்கப்படுகின்றன. அதன்படி, பத்தாம் வகுப்பு தேர்வை, 5,066 மாணவர்களும், பிளஸ் 1 தேர்வை, 4,325 மாணவர்களும், பிளஸ் 2 தேர்வை, 4,150 மாணவர்களும் எழுத உள்ளனர். கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 அரசு பொதுத்தேர்விற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. முதன்மை கண்காணிப்பாளர்கள், தேர்வு அறை கண்காணிப்பாளர்கள், பறக்கும் படை குழுவினர், வழித்தட அலுவலர்கள், வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள் விபரங்கள் தயார் செய்யும் பணி நடந்து வருகிறது.

இப்பணி முடிந்ததும், பணி நியமன ஆணைகள் வழங்கப்படும். விடைத்தாள் வைக்கப்படும் மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தி பாதுகாப்பு பலப்படுத்தப்படும். விடைத்தாள்கள், தேர்வுக்கான எழுது பொருட்களும் அனைத்து தேர்வு மையங்களுக்கும் வரும், 9ம் தேதிக்குள் கொண்டு செல்லப்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews