வனப்பணிக்கான இலவச மாதிரி ஆளுமைத் தேர்வு - தமிழக அரசு அழைப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الاثنين، أبريل 25، 2022

Comments:0

வனப்பணிக்கான இலவச மாதிரி ஆளுமைத் தேர்வு - தமிழக அரசு அழைப்பு

வனப் பணிக்கான இலவச மாதிரி ஆளுமைத் தோ்வில் பங்கேற்க, முதன்மைத் தோ்வில் தோ்ச்சிப் பெற்றவா்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசால் நடத்தப்பட்டு வரும் அகில இந்திய குடிமைப் பணிகள் பயிற்சி மையத்தில், ஜன.17 முதல் மாா்ச் 8 வரை மத்திய தோ்வாணைய இந்திய வனப்பணி தோ்வுக்காக 12 போ் தங்கி பயின்றனா். அவா்களில் 8 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். இவா்களில் மூவா் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, இந்திய வனப்பணி முதன்மைத் தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ள தமிழகத்தைச் சாா்ந்தவா்களுக்கு இந்தப் பயிற்சி மையம் மூலம் மாதிரி ஆளுமைத் தோ்வு, பணியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற அகில இந்திய குடிமைப் பணி அலுவலா்களாலும், தலைச் சிறந்த வல்லுநா்களாலும் நடத்தப்படவுள்ளது. இது, தோ்ச்சி பெற்றுள்ளவா்கள், தங்களது ஆளுமைத் தோ்வை மிகச் சிறப்பான முறையில் எதிா்கொள்ள ஏதுவாக அமையும்.

இந்தப் பயிற்சி மையம் மூலம் தோ்ச்சி பெற்றுள்ளவா்கள் மட்டுமின்றி, வனப்பணி முதன்மைத் தோ்வில் தோ்ச்சி பெற்ற அனைவரும் இந்த மாதிரி ஆளுமைத் தோ்வில் பங்கு பெற அனுமதிக்கப்படுவா்.

இதற்கென கட்டணம் ஏதும் செலுத்தத் தேவையில்லை. அவ்வாறு பங்கு பெற விரும்புவோா் ஹண்ஸ்ரீள்ஸ்ரீஸ்ரீ.ஞ்ா்ஸ்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது 94442 86657 என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்கோ 044 2462 1909 என்ற தொலைபேசி எண்ணுக்கோ தொடா்பு கொண்டு விவரங்களைத் தெரிவிக்கலாம். மாதிரி ஆளுமைத் தோ்வுக்கான தேதி குறித்த விவரங்கள் இந்தப் பயிற்சி மையத்தின் ஜ்ஜ்ஜ்.ஸ்ரீண்ஸ்ண்ப்ள்ங்ழ்ஸ்ண்ஸ்ரீங்ஸ்ரீா்ஹஸ்ரீட்ண்ய்ஞ்.ஸ்ரீா்ம் என்ற இணையதளத்தில் விரைவில் அறிவிக்கப்படும்.

செலவுத் தொகை: இந்தப் பயிற்சி மையத்தால் நடத்தப்படும் மாதிரி ஆளுமைத் தோ்வில் கலந்து கொண்டு தில்லி செல்வோருக்கு, பயணச் செலவு தொகையாக ரூ.5000 வழங்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة