தனியார் பள்ளிகளில் அரசு ஒதுக்கீட்டில் சேர விண்ணப்ப பதிவு நாளை துவக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, April 19, 2022

Comments:0

தனியார் பள்ளிகளில் அரசு ஒதுக்கீட்டில் சேர விண்ணப்ப பதிவு நாளை துவக்கம்

Under the Compulsory Right to Education Act, application registration for non-tuition-free student admission in government-allocated places in private schools is set to begin tomorrow. Under the Right to Compulsory and Free Education Act, the government must provide 25 percent of seats in private self-funded schools that do not have minority status, in the LKG, or first grade entry level class.

In these places, children from economically disadvantaged families are enrolled through the state's online registration system. Instead, tuition will be paid directly to schools on behalf of the government. Under this scheme, the Department of School Education has announced an online registration system for student admission for the coming academic year. Parents who want to enroll their children in this scheme can apply from tomorrow at https://rte.tnschools.gov.in/ The deadline to apply is May 18. Parents can apply through their computer. Arrangements have also been made for application registration at the Office of Primary Education, District, Regional Education Offices and Integrated School Education Regional Resource Centers, according to the Matric Directorate of the Department of School Education.

கட்டாய கல்வி உரிமை

கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், தனியார் பள்ளிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில், கல்வி கட்டணமில்லாத மாணவர் சேர்க்கைக்கு, நாளை முதல் விண்ணப்ப பதிவு துவங்க உள்ளது. கட்டாய மற்றும் இலவச கல்வி உரிமை சட்டத்தின் கீழ், சிறுபான்மை அந்தஸ்து பெறாத தனியார் சுயநிதி பள்ளிகளில், எல்.கே.ஜி., அல்லது ஒன்றாம் வகுப்பு ஆகிய நுழைவு நிலை வகுப்பில், 25 சதவீத இடங்களை அரசு ஒதுக்கீடாக வழங்க வேண்டும். அரசு ஒதுக்கீட்டில் சேர விண்ணப்ப பதிவு

இந்த இடங்களில், பொருளாதார அடிப்படையில் நலிவடைந்த குடும்பத்தினரின் குழந்தைகள், அரசின் ஆன்லைன் பதிவு முறை வழியாக சேர்க்கப்படுகின்றனர்.இந்த ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு, 8ம் வகுப்பு வரை படிக்க, பெற்றோரிடம் இருந்து கல்வி கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. மாறாக, அரசு சார்பில் பள்ளிகளுக்கு நேரடியாக கல்வி கட்டணம் வழங்கப்படும். இந்த திட்டத்தில், வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, ஆன்லைன் பதிவு முறையை பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது.

மே 18 வரை அவகாசம்

இந்த திட்டத்தில், தங்கள் பிள்ளைகளை சேர்க்க விரும்பும் பெற்றோர், https://rte.tnschools.gov.in/ என்ற இணையதளத்தில் நாளை முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க மே 18 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பெற்றோர் தங்கள் கணினி வழியாக விண்ணப்பிக்கலாம். மேலும், முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட, வட்டார கல்வி அலுவலகங்கள் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வட்டார வள மைய அலுவலகங்களிலும், விண்ணப்ப பதிவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாக, பள்ளிக்கல்வி துறையின் மெட்ரிக் இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews