சங்க நிர்வாகிகள் 7 பேர் பணியிடை நீக்கம்! - அரசு தலையிட ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, April 14, 2022

Comments:0

சங்க நிர்வாகிகள் 7 பேர் பணியிடை நீக்கம்! - அரசு தலையிட ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்!

அநீதிக்கெதிராகப் போராட்டம் நடத்திய ஆசிரியர் சங்க நிர்வாகிகள் 7 பேர் தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் பொதுச்செயலா ளர் ச.மயில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கரூர் மாவட்டம், குளித்தலை கல்வி மாவட்டம், கடகூர் ஒன்றியத்தில் 17(ஆ) நடவடிக்கைக்கு உள்ளான இடைநிலை ஆசிரியர் மோகன் என்பவரது பெயர் பதவி உயர்வுக்கான தேர்ந்தோர் பட்டியலில் வைக்கப்பட்டது. வட்டாரக்கல்வி அலுவ லரின் அழைப்பின் பேரில் அவர் பதவி உயர்வு கலந்தாய்வில் கலந்து கொண்டார். ஆனால் அவருக்கு பதவி உயர்வு ஆணை வழங்கப்படவில்லை. இந்த தவறுக்கு மாவட்டக்கல்வி அலுவ லரும், வட்டாரக்கல்வி அலுவலரும்தான் பொறுப்பாளிகள். இதற்கு மாறாக, கடகூர் வட்டாரக்கல்வி அலுவலர்கள் இருவர் மற்றும் உதவியாளர்கள் இருவரையும் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை தற்காலிக பணி நீக்கம் செய்தது. மேலும், ஆசிரியர் மோகனை யும் தற்காலிகப் பணி நீக்கம் செய்துள்ளது. இந்த அநியாயத்தை எதிர்த்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கரூர் மாவட்டக் கிளை திங்களன்று (ஏப். 11) குளித்தலை மாவட்டக்கல்வி அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம் நடத்தியது. இதனையடுத்து மோகனின் தற்காலிகப் பணிநீக்கம் ரத்து செய்யப்பட்டது. அதே நேரத்தில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில, மாவட்டச் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட 7 நிர்வாகிகளை மாவட்டக்கல்வி அலுவலர் தற்காலிகப் பணி நீக்கம் செய்துள்ளார். மேலும் பலரை யும் தற்காலிகப் பணிநீக்கம் செய்யும் முயற்சியில் கரூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மதன்குமார் ஈடுபட்டுள்ளார். அதிகார ஆணவத்தோடு செயல்பட்டு அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி வரும் கரூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்பாடுகளை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும். 7 பேரின் தற்காலிக பணி நீக்கத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். பணியாற்றிய மாவட்டங்களில் எல்லாம் அதிகார அத்துமீறல் புரிவதும், அதை எதிர்ப் பவர்களைப் பழிவாங்குவதையுமே வாடிக்கையாகக் கொண்டுள்ள கரூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மதன் குமாரின் விதிமீறிய செயல்பாடுகள் குறித்து மாநில பள்ளிக்கல்வித்துறை விசாரணை நடத்த நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி ஏப்.19ஆம் தேதி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப் பாட்டம் நடைபெறும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட் டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews