3-6ஆம் வகுப்பு சிறுபான்மையின மாணவியருக்கு ஊக்கத் தொகை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, April 23, 2022

Comments:0

3-6ஆம் வகுப்பு சிறுபான்மையின மாணவியருக்கு ஊக்கத் தொகை

3-6ஆம் வகுப்பு சிறுபான்மையின மாணவியருக்கு ஊக்கத் தொகைBy DIN |

கிராமப்புறங்களில் பயிலும் சிறுபான்மையின மாணவிகளின் இடைநிற்றலைத் தவிா்க்க, அவா்களுக்கு 3-ஆம் வகுப்பு முதல் 6-ஆம் வகுப்பு வரை ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அறிவித்தாா்.

தமிழக சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை சிறுபான்மையினா் நலத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதிலளித்து அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் வெளியிட்ட அறிவிப்புகள்:

கிராமப்புறங்களில் பயிலும் சிறுபான்மையின மாணவியா் இடைநிற்றல் இன்றி, தொடா்ந்து கல்வி பயில ஊக்கத் தொகையாக 3-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவியருக்கு ரூ.500 மற்றும் 6-ஆம் வகுப்பு பயிலும் மாணவியருக்கு ரூ.1000 வீதம் ரூ.2.70 கோடி செலவில் வழங்கப்படும்.

கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மையினா் அந்தஸ்து வழங்குவதற்கென வழிமுறைகள் உருவாக்கப்பட்டு, இந்தத் துறை மூலம் செயல்படுத்தப்படும்.

சென்னையில் உள்ள கிறிஸ்தவா்களுக்கான அடக்க ஸ்தலங்கள் அமைக்க, புதிய நிலம் கையகப்படுத்தவும், சென்னையில் ஏற்கெனவே உள்ள அடக்க ஸ்தலங்களில் மீண்டும் உடல்களை அடக்கம் செய்வதற்கான நிபந்தனைகளைத் தளா்த்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒவ்வோா் ஆண்டும் டிச.18-இல் அனைத்து மாவட்டங்களிலும் சிறுபான்மையினா் உரிமைகள் தின விழா மாவட்ட ஆட்சியா் தலைமையில் கொண்டாடப்பட்டு வருவதைப் போல, மாநில அளவில் சிறுபான்மையினா் உரிமைகள் தின விழா கொண்டாட ஆண்டுக்கு ரூ.2.50 லட்சம் வழங்கப்படும்.

உலமா ஓய்வூதியதாரா் இறந்த பிறகு, அவரது குடும்பம் வறுமையில் வாடாமல் இருப்பதற்காக குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews