அரசு ஊழியர் 2-வது திருமணம் செய்வது ஒழுக்கக் கேடானது - தமிழக அரசு அரசாணை வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, April 21, 2022

Comments:0

அரசு ஊழியர் 2-வது திருமணம் செய்வது ஒழுக்கக் கேடானது - தமிழக அரசு அரசாணை வெளியீடு

The Tamil Nadu government has warned that departmental disciplinary action will be taken if government employees get married for the second time. According to the Government of Tamil Nadu, under the Tamil Nadu Civil Servants Act, 1973, it is a criminal offense for a civil servant to remarry while his or her spouse is alive. Violation of this will result in departmental disciplinary action against the 2nd spouse. It is immoral for a civil servant to get married for the second time.

Civil servants who get married for the second time do not get the benefits that the first wife is legally entitled to. Therefore, another marriage in which the spouse is still alive is a punishable offense under Section 494 of the Indian Penal Code. The Madurai branch of the High Court has ordered that departmental disciplinary action be taken against civil servants under the Code of Conduct 1937. அரசு ஊழியர்கள் 2வது திருமணம்

அரசு ஊழியர்கள் 2வது திருமணம் செய்தால் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், ' 1973 தமிழக அரசு பணியாளர் சட்ட விதியின்படி, பணியில் இருக்கும் அரசு ஊழியர்கள் மனைவி அல்லது கணவர் உயிருடன் இருக்கும் போது, 2வது திருமணம் செய்தால் அது தண்டனைக்குரிய குற்றம். இதனை மீறி 2வது திருமணம் செய்வோர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். அரசு ஊழியர் 2-வது திருமணம் செய்வது ஒழுக்கக் கேடானது.அரசு மரியாதைக்கு இழுக்கு ஏற்படுத்தும் செயல். தமிழக அரசு அரசாணை

அரசு ஊழியர் 2-வது திருமணம் செய்வதால் சட்ட ரீதியாக முதல் மனைவிக்கு கிடைக்க வேண்டிய பலன்கள் கிடைப்பதில்லைதமிழக அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்கள், அவர் பணியிலோ அல்லது விடுப்பிலோ அல்லது அயற்பணியில் இருப்பினும் தமிழக அரசு ஊழியர்கள் நடத்தை விதிகளுக்கு உள்பட்டவர்களாவர். எனவே, கணவன் அல்லது மனைவி உயிருடன் இருக்கும் நிலையில், அவர்கள் செய்துகொள்ளும் மற்றொரு திருமணம் இந்திய தண்டணைச் சட்டம் 494ம் பிரிவின்படி தண்டனைக்குரிய குற்றம். உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவின்படி அரசு ஊழியர்கள் நடத்தை விதிகள் 1937-இன் படி அவர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews