குரூப் 4 தேர்வுக்கு 21.11 லட்சம் பேர் விண்ணப்பம் - ஜூலை 24ம் தேதி எழுத்து தேர்வு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الجمعة، أبريل 29، 2022

Comments:0

குரூப் 4 தேர்வுக்கு 21.11 லட்சம் பேர் விண்ணப்பம் - ஜூலை 24ம் தேதி எழுத்து தேர்வு!

TNPSC குரூப் 4 தேர்வு

குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட காலக்கெடு நேற்று நள்ளிரவுடன் முடிந்தது. நேற்று மாலை 7.10 மணி நிலவரப்படி சுமார் 21,11,357 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான எழுத்து தேர்வு ஜூலை 24ம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 பதவியில் விஏஓ 274 இடம், ஜூனியர் அசிஸ்டெண்ட் 3,681, தட்டச்சர் 2108, சுருக்கெழுத்து தட்டச்சர்(கிரேடு 3) 1024 என 7138 இடங்கள். வீட்டு வசதி வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் ஜூனியர் அசிஸ்டெண்ட், பில் கலெக்டர், சுருக்கெழுத்து தட்டச்சர் பதவியில் 163 இடங்கள் என மொத்தம் 7,301 இடங்கள் போட்டி தேர்வுகள் நிரப்பப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. 21.11 லட்சம் பேர் விண்ணப்பம்

மேலும் 81 இடங்கள் விளையாட்டு வீரர்களுக்கான கோட்டா அடிப்படையில் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து குரூப் 4 தேர்வுக்கு கடந்த மாதம் 30ம் தேதி முதல் விண்ணப்பித்தல் தொடங்கியது. சுமார் 30 நாட்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது. அதாவது நேற்று நள்ளிரவு 12 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதனால், தேர்வுக்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியது. இறுதி நாளான நேற்றும் லட்சத்திற்கும் மேற்பட்டோர் போட்டி போட்டு கொண்டு விண்ணப்பித்தனர். இதனால், விண்ணப்பித்தோர் எண்ணிக்கை பல லட்சத்தை தாண்டியுள்ளது. ஜூலை 24ம் தேதி எழுத்து தேர்வு!

இது குறித்து டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது:

குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது. கடைசி நாளுக்கு முந்தைய 4 நாட்களில் விண்ணப்பிப்போர் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இறுதி நாளான்றும்(நேற்றும்) விண்ணப்பிக்க அதிகமானோர் ஆர்வம் காட்டினார். இதனால் நேற்று மாலை(7.10 மணி நிலவரப்படி) வரை 21 லட்சத்து 11 ஆயிரத்து 357 பேர் விண்ணப்பித்துள்ளனர். இது 7.10 மணி நிலவரம். நள்ளிரவு 12 மணி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் இருப்பதால் விண்ணப்பிப்போர் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும். இறுதியாக எவ்வளவு பேர் விண்ணப்பித்துள்ளனர் என்ற முழு விவரம் இன்று தெரியவரும். தொடர்ந்து குரூப் 4 தேர்வுக்கான எழுத்து தேர்வு ஜூலை 24ம் தேதி நடைபெறும். காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை 3 மணி நேரம் இந்த தேர்வு நடைபெறும் என்றார். இவ்வாறு அவர் கூறினார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة