பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு - தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்தல் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, April 21, 2022

Comments:0

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு - தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்தல் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

அரசுத் தேர்வுகள் இயக்ககம் - - மே 2022 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு - பள்ளி மாணவர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்தல் - பெயர்ப்பட்டியலில் திருத்தம் மேற்கொள்வது அறிவுரைகள் வழங்குவது சார்ந்து.
நடைபெறவுள்ள மே 2022 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதவுள்ள பள்ளி மாணவர்கள் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை 22.04.2022 பிற்பகல் 2.00 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பள்ளிகள் தங்களது USER ID மற்றும் PASSWORD-ஐ பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும், மே 2022 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கான பெயர்ப்பட்டியலில் பள்ளி மாணவ / மாணவிகளின் பெயர், பிறந்த தேதி, மொழி ஆகிய திருத்தங்கள் ஏதுமிருப்பின், சம்பந்தப்பட்ட தேர்வு மைய கண்காணிப்பாளர்களை அணுகி தேர்வு மையத்திற்கான பெயர்பட்டியலில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளும்படி, சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர் / முதல்வர்களிடம் அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews