Safety and security training - Spd proceedings - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, March 20, 2022

Comments:0

Safety and security training - Spd proceedings

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, 2021-2022 ஆம் கல்வி ஆண்டிற்கான திட்ட ஏற்பளிப்புக் குழு ஒப்புதல் அறிக்கையில் (PAB Minutes) உள்ளபடி பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பு என்ற தலைப்பின்கீழ், Orientation Programme for Teachers on Safety and Security என்ற தலைப்பில் அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை, பட்டதாரி, முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு (1,45,138 + 79,677 = 2,24,815 ஆசிரியர்கள்) “பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு” சார்ந்து பயிற்சியும், அனைத்து வகை ஆசிரியர்களும், தங்கள் பள்ளி, வகுப்பு மாணவர்களுக்கு முதல்நிலை வழிகாட்டுபவர்களாக செயல்படுவதை ஊக்குவிப்பதற்காகவும் ஆசிரியர் ஒருவருக்கு ரூ. 500/- வீதம் மொத்தத் தொகை ரூ.1124.075 இலட்சம் நிதியும் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கான பயிற்சியினை இணையதள வழியாக அதாவது பள்ளிகளில் உள்ள Hi-Tech Lab மூலமாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிகளில் இணையதள செலவினங்க ளுக்காக Orientation Programme for Teachers on Safety and Security (Both Elementary, Secondary) என்ற தலைப்பில் உள்ள நிதி இணைப்பில் உள்ளவாறு மாவட்டங்களுக்கு விடுவிக்கப்படுகிறது.

இதையும் படிக்க | அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்

விடுவிக்கப்படும் நிதிக்கான பயன்பாடு சார்ந்த விரிவான வழிகாட்டுதல்கள் பின்னர் தெரிவிக்கப்படும். அதுவரை விடுவிக்கப்பட்ட நிதியை அந்தந்த மாவட்ட திட்ட அலுவலக வங்கிக் கணக்கில் வைத்திருக்க அனைத்து மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் / முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

இணைப்பு: 1. மாவட்ட வாரியாக நிதி விடுவிப்பு விவரம் (Secondary)

2. மாவட்ட வாரியாக நிதி விடுவிப்பு விவரம் (Elementary)

CLICK HERE TO DOWNLOAD

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews