மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்? - மத்திய அரசு விளக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الجمعة، مارس 25، 2022

1 Comments

மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்? - மத்திய அரசு விளக்கம்

புது தில்லி: 2004 ஜனவரி 1-க்கு பிறகு மத்திய அரசுப் பணியில் சேர்ந்த பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்தும் திட்டம் ஏதுமில்லை என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக இன்று பதிலளித்த மத்திய பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள் மற்றும் பிரதமர் அலுவலக இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் விளக்கம் அளித்துள்ளார்.

2004 ஜனவரி 1-க்கு பிறகு பாதுகாப்பு படைகளை தவிர இதர மத்திய அரசுப் பணிகளில் சேர்ந்த புதிய பணியாளர்கள் அனைவருக்கும் தேசிய ஓய்வூதியத் திட்டத்தை நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை 2004 ஜனவரி 1 முதல் செயல்படுத்தியது. எனவே, 2004 ஜனவரி 1-க்கு பிறகு மத்திய அரசு பணியில் சேர்ந்த அலுவலர்களுக்கு, மத்திய குடிமைப் பணிகள் (ஓய்வூதிய) விதிகள்-1972, பொருந்தாது. 2004 ஜனவரி 1-க்கு பிறகு மத்திய அரசுப் பணியில் சேர்ந்த பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்தும் எண்ணம் அரசிடம் பரிசீலனையில் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக இன்று பதிலளித்த மத்திய பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள் மற்றும் பிரதமர் அலுவலக இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் விளக்கம் அளித்துள்ளார்.

2004 ஜனவரி 1-க்கு பிறகு பாதுகாப்பு படைகளை தவிர இதர மத்திய அரசுப் பணிகளில் சேர்ந்த புதிய பணியாளர்கள் அனைவருக்கும் தேசிய ஓய்வூதியத் திட்டத்தை நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை 2004 ஜனவரி 1 முதல் செயல்படுத்தியது. எனவே, 2004 ஜனவரி 1-க்கு பிறகு மத்திய அரசு பணியில் சேர்ந்த அலுவலர்களுக்கு, மத்திய குடிமைப் பணிகள் (ஓய்வூதிய) விதிகள்-1972, பொருந்தாது. 2004 ஜனவரி 1-க்கு பிறகு மத்திய அரசுப் பணியில் சேர்ந்த பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்தும் எண்ணம் அரசிடம் பரிசீலனையில் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

هناك تعليق واحد:

  1. 30 ஆண்டு காலம் அரசுக்கு பணி செய்து ஓய்வு காலத்தில் ஊதியம் வழங்க அரசுக்கு மனம் இல்லை .MP க்கு ஏன் பென்ஷன் வழங்குகிறது அரசு ??????.

    ردحذف

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة