கூட்டுறவு சங்க முறைகேட்டில் ஈடுபட்டு கைதான அரசுப்பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட் - மாவட்ட கல்வி அலுவலர் நடவடிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, March 26, 2022

Comments:0

கூட்டுறவு சங்க முறைகேட்டில் ஈடுபட்டு கைதான அரசுப்பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட் - மாவட்ட கல்வி அலுவலர் நடவடிக்கை

சேலம் அருகே கூட்டுறவு சங்க முறைகேட்டில் ஈடுபட்ட அரசுப்பள்ளி ஆசிரியரை சஸ்பெண்ட் செய்து, மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கொளத் தூரில் ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிக்கன நாணய சங்கம் செயல் பட்டு வருகிறது. இச்சங்கத் தில் 250க்கும் மேற்பட்ட ஆசிரியர் மற்றும் பணியா ளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இச்சங்கத்தில் கொளத்தூர் அடுத்ததார்க் காடு ஒன்றிய நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரி யர் பிரபு (48), தலைவராக இருந்து வந்தார். இதே போல், நங்கவள்ளியைச் சேர்ந்த சிட்டிமுருகன் (52) என்பவர் செயலாளராக இருந்து வந்தார். இச்சங் கத்தில் போலி ரசீது, நிதி மோசடி என பல்வேறு முறைகேடு நடந்திருப்ப தாக புகார் எழுந்தது.

இதையடுத்து ஓமலூர் சரக துணைப்பதிவாளர் சுவேதா மற்றும் கூட்டுறவு அதிகாரிகள் ஆய்வு செய்த னர். இதில் மத்திய கூட் டுறவு வங்கியில் இருந்து வழங்கப்படும் காசோ லைகளை திருத்தியது உள் ளிட்ட பலவகைகளில் 725 லட்சத்துக்குமேல் முறை கேடு நடந்துள்ளது தெரிய வந்தது. இதையடுத்து சங்க செயலாளரான சிட்டி முருகன் சஸ்பெண்ட்செய் யப்பட்டார்.

இந்த மோசடி தொடர் பாக வணிக குற்றப்புல னாய்வு பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் இன்ஸ்பெக் டர் சித்ராதேவி வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தினார். அதில், காசோலைகளில் திருத் தம் செய்து ரூ.24.91 லட்சம் மோசடி நடந்திருப்பதும், சங்கத்தின் தலைவர் பிரபு (48), செயலாளர் சிட்டிமு ருகன் ஆகியோர் இதில் ஈடு பட்டிருப்பதும் தெரியவந் தது. இதையடுத்து கடந்த இருதினங்களுக்கு இருவ ரும் கைது செய்யப்பட்டு, ஆத்தூர் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதில், கைது செய்யப் பட்ட தலைவர் பிரபு, கொளத்தூர் அடுத்த தார்க்காடு ஒன்றிய நடு நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வந்தார். அவர் கைது செய்யப்பட்டது குறித்து. போலீசார் தரப்பில் இருந்து கல்வித்துறைக்கு அறிக்கை அளித்தனர். இதன்பேரில் விசாரணை நடத்திய, இடைப்பாடி மாவட்டகல்வி அலுவலர் சிவானந்தம்,ஆசிரியர் பிர புவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இச்சம்ப வம் ஆசிரியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள் ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews