மறுகட்டமைப்பு செய்யப்பட உள்ள பள்ளி மேலாண்மை குழுவில் பெண் உறுப்பினர்களுக்கு அதிக முன்னுரிமை கல்வித்துறை உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, March 17, 2022

Comments:0

மறுகட்டமைப்பு செய்யப்பட உள்ள பள்ளி மேலாண்மை குழுவில் பெண் உறுப்பினர்களுக்கு அதிக முன்னுரிமை கல்வித்துறை உத்தரவு

பள்ளி மேலாண்மை குழுவில் பெண் உறுப்பினர்கள் அதிகம் இருக்க வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டு இருக்கிறது. விழிப்புணர்வு கூட்டம் பள்ளிகளின் முன்னேற்றத்துக்காகவும், பள்ளி வளர்ச்சிக்கு துணை நிற்கவும் ஏற்படுத்தப்பட்டது பள்ளி மேலாண்மை குழு. இந்த குழு தொடர்பாக மாணவர்களின் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் வருகிற 20-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் நடைபெற இருக்கிறது. அதன் பின்னர் மேலாண்மை குழு புதிய உறுப்பினர்களை கொண்டு மறு கட்டமைப்பு செய்யப்பட உள்ளது. அதன்படி இந்த விழிப்புணர்வு கூட்டத்தை நடத்துவது தொடர்பாகவும், பள்ளி மேலாண்மை குழுவை மறு கட்டமைப்பு எவ்வாறு செய்ய வேண்டும்? என்பது தொடர்பாகவும் கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது. அதில் கூறப்பட்டிருக்கும் சில முக்கிய அம்சங்கள் வருமாறு:- பெண்களுக்கு முன்னுரிமை

* பள்ளி மேலாண்மை குழு விழிப்புணர்வு கூட்டம், மறு கட்டமைப்பு தொடர்பான விளக்க கூட்டம் நடைபெறுவது தொடர்பான தகவல்களை மாணவர்களின் பெற்றோர்களுக்கு, மாணவர்கள் வாயிலாக தெரிவிக்க வேண்டும். அதற்கு மாணவர்களின் நோட்டுப் புத்தகத்தில் அந்த தகவலை எழுதி அனுப்பி பெற்றோரின் கையெழுத்தை வாங்கி வரச் சொல்லலாம். கூட்டம் தொடர்பான துண்டுப் பிரசுரத்தையும் அவர்களிடம் கொடுத்து அனுப்பலாம் அல்லது பெற்றோரின் வாட்ஸ்-அப் எண்ணுக்கு தகவல்களை அனுப்பலாம்.

* பள்ளி மேலாண்மை குழு கூட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மறுகட்டமைப்பு செய்யப்பட வேண்டும். இந்தப் குழுவுக்கான 20 உறுப்பினர்களில் 15 பேர் மாணவர்களின் பெற்றோர் இருக்க வேண்டும். அந்த 15 பேரில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் 10 பேர் பெண்களாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 7 பெண்களாவது இருக்க வேண்டும். உறுப்பினர்களை தேர்வு செய்வதில் ஒளிவு மறைவற்ற முறை பின்பற்றப்பட வேண்டும். பெற்றோர்களை தவிர்த்து மீதமுள்ள 5 பேர் ஆசிரியர், தலைமையாசிரியர், உள்ளாட்சி பிரதிநிதிகள், கல்வி ஆர்வலர், சுய உதவி குழு உறுப்பினர் ஆவார்கள். குழு புகைப்படம் * பள்ளி மேலாண்மை குழுவின் தலைவர், துணைத்தலைவர் பெற்றோர் நியமிக்கப்படுவார்கள். கூட்ட அழைப்பாளராக தலைமை ஆசிரியர் இருப்பார். * மக்கள் கூடுகின்ற முக்கியமான இடங்களில் பள்ளி மேலாண்மை குறித்த விழிப்புணர்வு பதாகைகள் வைக்க வேண்டும்.

* உறுப்பினர்களில் பெற்றோரின் ஆதரவு யாருக்கு அதிகமாக இருக்கிறதோ அவரே உறுப்பினராகவும், தலைவராகவும் நியமிக்கப்படுவார்கள்.

* தேர்ந்தெடுக்கப்படும் 20 உறுப்பினர்கள் குழுவாக நின்று புகைப்படம் எடுத்து அதை கல்வியியல் மேலாண்மை தகவல் மையத்தில் (எமிஸ்) பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு விவரங்கள் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews