சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்பு - பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வும் தொடக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, March 01, 2022

Comments:0

சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்பு - பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வும் தொடக்கம்

சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் 84 இடங்களை மாணவர்கள் தேர்வு செய்தனர். சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி (பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், பிஎச்எம்எஸ்) ஆகிய பட்டப் படிப்புகளுக்கு 2021-22ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் www.tnhealth.tn.gov.in என்ற சுகாதாரத்துறை இணையதளத்தில் கடந்த டிசம்பர் 28ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி, ஜனவரி 18ம் தேதி மாலை 5 மணி வரை நடந்தது.

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்தனர். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தகுந்த ஆவணங்களுடன் கடந்த ஜனவரி 18ம் தேதி மாலை 5.30 மணி வரை செயலாளர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குநர், அலுவலகம், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை - 600106 என்ற முகவரியில் சமர்ப்பித்தனர். விண்ணப்பங்கள் பரிசீலனைக்குப்பின், தகுதியானவர்களுக்கான தரவரிசைப் பட்டியல்கள் சுகாதாரத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 3,721 பேர் இடம்பெற்றுள்ளனர். அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்இடஒதுக்கீட்டில் 87 இடங்கள் ஒதுக்கப்படுகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு தரவரிசைப் பட்டியலில் 378 பேர் இடம் பெற்றுள்ளனர். நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 989 பேரும், தனியார் கல்லூரிகளின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 761 பேரும் இடம் பிடித்துள்ளனர்.

இதையடுத்து சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகத்தில் முதல் நாளான நேற்று அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு கலந்தாய்வு தொடங்கியது. அதில் 84 மாணவர்கள் கல்லூரிகளை தேர்வு செய்தனர். இந்நிலையில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் இடங்கள் நிரம்பியதையடுத்து பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வும் தொடங்கியது. அதில் சிறப்பு பிரிவினருக்கான 11 இடங்கள், பொதுப்பிரிவில் 65 இடங்கள் என 76 இடங்களுக்கும் நேற்றே கலந்தாய்வு நடந்தது.

இதையும் படிக்க | கொரோனா 4ம் அலை ஜூன் மாதம் ஏற்படும் - ஐஐடி ஆய்வில் தகவல்

இதை தொடர்ந்து, அரசு பள்ளி ஒதுக்கீட்டில் இடங்களை தேர்வு செய்த மாணவருக்கு கல்லூரிகளில் சேர்வதற்கான ஆவணங்களை வழங்கினர். அதை தொடர்ந்து மாணவர்கள் நேற்று முதல் கல்லூரிகளில் சேர தொடங்கினர். மேலும் தரவரிசைப் பட்டியல்கள் மற்றும் கலந்தாய்வு தொடர்பான விவரங்களை முழுமையாக சுகாதாரத்துறை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews