‘எனது மகளின் புத்தகத்தை கிழித்த சிறுமியை வரச்சொல்’ என மிரட்டி நர்சரி பிரைமரி பள்ளி தாளாளர் மீது தாக்குதல் நடத்தியதாக, மாணவி ஒருவரின் தந்தையிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சென்னை அண்ணாசாலை ரசா ஹைதர் தெருவில் இஷாத் அலி அகமது(44) என்பவர் நர்சரி பிரைமரி பள்ளி நடத்தி வருகிறார். இவரது பள்ளியில் 4ம் வகுப்பில் ஹரிணி என்ற மாணவி படித்து வருகிறார். ஹரிணி தன்னுடன் படிக்கும் சாதனா என்ற மாணவியின் புத்தகத்தை கிழித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சாதனா தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சாதனாவின் பெற்றோர் பள்ளிக்கு வந்து புத்தகத்தை கிழித்த மாணவி ஹரிணியை வரசொல்லுங்கள் என்று கூறி பள்ளி தாளாளரிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதில் மாணவி சாதனாவின் தந்தையுடன் வந்த நபர் ஒருவர் பள்ளியில் இருந்து பிளாஸ்டிக் நாற்காலியை எடுத்து தரையில் அடித்து உடைத்தார். இதில் தாளாளர் இஷாத் அலி அகமது முகத்தில் உடைந்த நாற்காலி பட்டு ரத்தம் கொட்டியது. இதனால் இருதரப்புக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இதனால், காயமடைந்த பள்ளி தாளாளர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பள்ளிக்கு திரும்பினார்.பிறகு சம்பவம் குறித்து அண்ணாசாலை காவல் நிலையத்தில் மாணவி சாதனாவின் தந்தை மற்றும் அவரது நண்பர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தார். அந்த புகாரின் படி போலீசார் மாணவியின் தந்தையிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
بحث هذه المدونة الإلكترونية
الأربعاء، مارس 30، 2022
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.