2022-23 நிதிநிலை அறிக்கையில் அரசுப்பள்ளியில் பயிலும் பெண் குழந்தைகளுக்கு உயர்கல்வி உதவித்தொகை வழங்குதலை அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் பெண் குழந்தைகளுக்கும் நீட்டிக்க வேண்டுதல் - சார்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, March 23, 2022

Comments:0

2022-23 நிதிநிலை அறிக்கையில் அரசுப்பள்ளியில் பயிலும் பெண் குழந்தைகளுக்கு உயர்கல்வி உதவித்தொகை வழங்குதலை அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் பெண் குழந்தைகளுக்கும் நீட்டிக்க வேண்டுதல் - சார்பு

2022-23 நிதிநிலை அறிக்கையில் அரசுப்பள்ளியில் பயிலும் பெண் குழந்தைகளுக்கு உயர்கல்வி உதவித்தொகை வழங்குதலை அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் பெண் குழந்தைகளுக்கும் நீட்டிக்க வேண்டுதல் - சார்பு 2022-23 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் 6 முதல் 12 வகுப்பு வரை அரசுப்பள்ளிகளில் படித்து உயர்கல்வி படிக்கும் பெண் குழந்தைகளுக்கு மாதம் ரூ1000/- உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அரசுப்பள்ளிகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருவதும் பெண் குழந்தைகளின் கல்வி நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையிலும் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு மிகவும் போற்றுதலுக்குரியதாகும். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் முத்தாய்ப்பான இந்த அறிவிப்பிற்கு தாங்களும் ஒரு காரணமானவர் என்ற அடிப்படையில் தங்களுக்கும் எங்களது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம். இந்த சிறப்பு மிகுந்த திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் தமிழ் வழி மாணவிகளுக்கும் விரிவுப்படுத்தப்பட வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 8500 அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 12 இலட்சம் மாணவிகளுக்கும் இத்திட்டத்தின் பலன் சென்றடைய வேண்டும். ஆங்கிலேய ஆட்சி காலத்தில் அரசுப்பள்ளிகள் அமையாத இடங்களில் கூட பொது நல நோக்காளர்களால் அரசு உதவி பெறும் பள்ளிகள் தோற்றுவிக்கப்பட்டு சிறப்பாக கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. இதையும் படிக்க | ஒன்றிய பல்கலைக்கழகங்களில் பொது நுழைவுத்தேர்வு மூலம் மட்டுமே மாணவர் சேர்க்கை: யுஜிசி உத்தரவு

அரசு பள்ளிகளைப்போன்றே அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஏழை, எளிய குடும்பத்து குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். எனவே, தமிழசு அரசின் அரசுப்பள்ளி பெண் குழந்தைகள் உயர்கல்வி உதவித்தொகைத்திட்டம் அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்று வரும் பெண் குழந்தைகளுக்கும் கிடைக்கும் வகையில் நீட்டித்து தர வேண்டுமென மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களையும், மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களையும் பணிவுடன் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews