நீட் தேர்வில் சாதித்த டீ விற்கும் இளைஞன்: டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் சீட் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, February 06, 2022

Comments:0

நீட் தேர்வில் சாதித்த டீ விற்கும் இளைஞன்: டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் சீட்

அசாம் மாநிலத்தில் டீ விற்கும் இளைஞர் முதல் முயற்சியிலேயே நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளான். அசாம் மாநிலம், பஜாலி மாவட்டம், பட்டசர்குர்சி சவுக் பகுதியில் வசிப்பவர் ராகுல்தாஸ் (24). இவரது தந்தை 11 ஆண்டுகளுக்கு முன்பே குடும்பத்தை விட்டு சென்று விட்டார். 2 பிள்ளைகளுடன் வறுமையில் சிக்கி திணறிய ராகுலின் தாய், டீ கடை நடத்தி குடும்பத்தை காப்பாற்றி வந்தார். வறுமை காரணமாக ராகுல் 12ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திக் கொண்டார். பின்னர், தாய்க்கு உதவியாக டீ கடையில் வேலைகளை பார்த்து வந்தார். அங்கு கிடைக்கும் நேரத்தில் அயராது படித்தும் வந்தார். இதையடுத்து, மேல் படிப்பு படிக்க ஆசைப்பட்ட ராகுல் பெட்ரோகெமிக்கல் இன்ஜினியரிங் மத்திய நிறுவன தொழில்நுட்ப படிப்பை 2 ஆண்டுகள் படித்தார். பின்னர், பிளாஸ்டிக் இன்ஜினியரிங்கில் 85 சதவீத மதிப்பெண் பெற்றார். பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் குவாலிட்டி இன்ஜினியராக 2020ல் சேர்ந்தார். தனது உறவினரை போன்று தானும் டாக்டராக வேண்டும் என்ற லட்சியத்தில் வேலையை ராஜினாமா ெசய்து விட்டு நீட் தேர்வுக்கு தயார் படுத்திக்கொண்டார்.

தேர்வில் 12,068வது ரேங்க்கில் தேர்ச்சி பெற்றார். இவர் பட்டியலின வகு டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் சீட் கிடைத்துள்ளது. ராகுலின் மருத்துவ படிப்பு செலவு முழுவதையும் அரசு ஏற்றுக்கொள்ளும் என்று அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews