பணி பதிவேட்டை ஒப்படைக்காத விவகாரம் சூளகிரி வட்டார கல்வி அலுவலர் சஸ்பெண்ட்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் உட்கோட்டம் சூளகிரி வட்டார கல்வி அலுவலராக பணியாற்றி வருபவர் அன்னையப்பா(45). இவர் கடந்த ஆண்டு டிசம்பர் 29ம் தேதி முதல், அங்கு பணிபுரிந்து வருகிறார். இதற்கு முன்பு கெலமங்கலம் வட்டார கல்வி அலுவலராக இருந்த போது, ஆசிரியர்களின் பதவி உயர்விற்காக பணி விவரங்களை பதிவு செய்வதற்காக, பணி பதிவேட்டை வீட்டிற்கு எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் புதிதாக பொறுப்பேற்ற வட்டார கல்வி அலுவலர் லட்சுமி நாராயணாவிடம், அவர் பணி பதிவேட்டை ஒப்படைக்கவில்லை. இதுகுறித்து ஓசூர் மாவட்ட கல்வி அலுவலர் முனிராஜ் விசாரணை நடத்தினார்.
இதையும் படிக்க | தமிழில் கையெழுத்திடும் முறை பள்ளிகளில் அமல்படுத்த உத்தரவு
பின்னர் அவருடைய பரிந்துரையின் பேரில், பணிபதிவேட்டை ஒப்படைக்காமல் இருந்த காரணத்திற்காக, சூளகிரி வட்டார கல்வி அலுவலர் அன்னையப்பாவை, சஸ்பெண்ட் செய்து கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி உத்தரவிட்டார்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.