திட்டமிட்டபடி குரூப் 1 மெயின் தேர்வு நடக்கும் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியிடப்படும் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, February 05, 2022

Comments:0

திட்டமிட்டபடி குரூப் 1 மெயின் தேர்வு நடக்கும் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியிடப்படும்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) அரசு துறைகளில் பணியாற்றி வருவர்களுக்கான பதவி உயர்வுக்கான தேர்வுகளை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக 48 வகையான தேர்வுகளுக்கான எழுத்து தேர்வை நேற்று நடத்தியது.

தமிழகத்தில் உள்ள 38 மாவட்ட தலைநகரங்களில் இந்த தேர்வு நடந்தது. மொத்தம் 8,000 பேர் இந்த தேர்வை எழுதினர். இது குறித்து டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது:டிஎன்பிஎஸ்சி நடத்தியுள்ள துறை தேர்வுக்கான ரிசல்ட் ஏப்ரல் இறுதியில் வெளியிடப்படும்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் ஒரு முறை நிரந்தரப்பதிவு(ஒன் டைம் ரிஜிஸ்ட்ரேசன்) வைத்திருப்பவர்கள் தங்களது ஆதார் குறித்த விவரங்களை வருகிற 28ம் தேதிக்குள் தவறாமல் சமர்ப்பிக்க வேண்டும் என்று கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும். குரூப் 1 பதவியில் 66 பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட தேர்வுக்கான மெயின் தேர்வு திட்டமிட்டப்படி மார்ச் 4, 5, 6ம் தேதி நடைபெறும். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் டிஎன்பிஎஸ்சி செய்து வருகிறது. குரூப் 1 மெயின் தேர்வை 3800 பேர் எழுத உள்ளனர். குரூப் 2, குரூப்2 ஏ பதவியில் காலியாக உள்ள பதவியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு இந்த மாதம் மத்தியில் வெளியிடப்படும். அறிவிப்பு வெளியானதில் இருந்து 75 நாட்களுக்குள் எழுத்து தேர்வு நடைபெறும். குரூப் 4 பதவியில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு மார்ச் மாதம் வெளியிடப்படும்.

அறிவிப்பு வெளியிடப்பட்ட 75 நாளில் எழுத்து தேர்வு நடைபெறும். வழக்கமாக போட்டி தேர்வுகள் காலை 10 மணியில் இருந்து 1 மணி வரையும், 2 மணி முதல் 5 மணி வரையும் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது தமிழ் தேர்வு நடத்துவதால் போட்டி தேர்வுகள் நடைபெறும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது இனி வரும் தேர்வுகளில் காலையில் 9.30 மணி முதல் 12.30 மணி வரை எழுத்து தேர்வு நடைபெறும். மதியம் 2 மணி முதல் 5 மணி வரையும் தேர்வு நடைபெறும்.

குரூப் 4 தேர்வை பொறுத்தவரை தமிழ் தேர்வுகள் ஆப்ஜெக்டிவ் வடிவிலும், மற்ற தேர்வுகளில் விளக்கும் வகையிலும் இருக்கும். இதில் கட்டாயம் 40 மதிப்பெண்கள் பெற வேண்டும். கூடுதலாக பெறப்படும் ஒவ்வொரு மதிப்பெண்களும், போட்டி தேர்வுக்கான கால்குலேசன் பண்ணுவதற்கு எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews