பல்கலைகளின் எதிர்காலம் கேள்விக்குறி : ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, January 26, 2022

Comments:0

பல்கலைகளின் எதிர்காலம் கேள்விக்குறி : ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்

பல்கலைக் கழகங்கள் உள்ளிட்ட உயர் கல்வி மையங்கள் கொரோனா காரணமாக 'டிஜிட்டல்' முறைக்கு தற்காலிகமாக மாறினாலும், அவை எதிர்காலத்தில் பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள நேரும்' என, ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்பார்ப்பு

'எர்னஸ்ட் அண்டு யங்' என்ற ஆலோசனை நிறுவனம் உயர்கல்வித் துறையின் எதிர்காலம் குறித்து இந்தியா, அமெரிக்கா, சிங்கப்பூர், பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 29 பல்கலைகளின் வேந்தர்களிடம் ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:முன்னேறிய நாடுகளைச் சேர்ந்த பல்கலைகள் கொரோனா காரணமாக ஏராளமான பிரச்னைகளை சந்தித்து வருகின்றன. அவை மாறும் பணிச் சூழலின் தேவைகள், தரமான டிஜிட்டல் படிப்பிற்கான மாணவர்களின் எதிர்பார்ப்புகள், புவிசார் அரசியல் சவால்கள் உள்ளிட்டவற்றை எதிர்கொள்ள நேரிடும்.கொரோனா பரவலால் தற்காலிகமாக வீடுகளில் மாணவர்கள் கல்வி கற்பது, மாற்றத்திற்கான ஒரு துவக்கம் தான். பல்கலைகள் மீண்டும் திறக்கப்பட்டாலும், இயல்பு நிலை திரும்பாது என, ஆய்வில் பங்கேற்ற பலர் தெரிவித்துள்ளனர்.

அச்சுறுத்தல்

ஊடகம், சில்லரை விற்பனை, எரிசக்தி ஆகிய துறைகளின் வர்த்தகம் அடைந்து வரும் மாற்றம் போல, உயர் கல்வித் துறையிலும் வேகமான மாற்றம் வர உள்ளது. அதை சமாளிக்கும் திட்டங்களை பல்கலைகள் இப்போதே உருவாக்கத் துவங்க வேண்டும். நாளைய மாணவர்களுக்கு டிஜிட்டல் முறையிலான கல்வி போதிப்பு, கல்வி கற்றல் ஆகியவற்றை மேம்பட்ட தரத்தில் வழங்கினால் மட்டுமே போட்டியை சமாளிக்க முடியும். பல்கலைகள் அவற்றின் ஏகாதிபத்திய அங்கீகாரத்தை இழந்து விட்டன. அவை, பட்டமளிப்பு நடைமுறை சாராத, அவ்வப்போது மேம்படுத்தப்பட்ட கல்வியை போதிக்க வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளன.இல்லையெனில் எதிர்காலத்தில் அச்சுறுத்தலை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு பல்கலைகள் தள்ளப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews