ஆதிதிராவிடர் நலப் பள்ளி ஆசிரியர்கள் பணி மாறுதல் கலந்தாய்வு தொடக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، يناير 19، 2022

Comments:0

ஆதிதிராவிடர் நலப் பள்ளி ஆசிரியர்கள் பணி மாறுதல் கலந்தாய்வு தொடக்கம்

ஆதிதிராவிடர் நலப் பள்ளி ஆசிரியர்கள் பணி மாறுதல் கலந்தாய்வு இன்று தொடக்கம்

கரோனா பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்ட ஆதிதிராவிடர் நலப் பள்ளி ஆசிரியர் பணிமாறுதல் கலந்தாய்வு இன்று தொடங்கவுள்ளது.

ஆதிதிராவிடர் நலத் துறையின்கீழ் 1,138 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 83,259 மாணவர்கள் பயின்று வருகின்றனர். நலப் பள்ளிகளில் சுமார் 630 ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக இருந்தன. இதை கருத்தில்கொண்டு காலிப் பணியிடங்களை பணிநிரவல் மூலம் நிரப்ப ஆதிதிராவிடர் நல ஆணையம் முடிவு செய்தது. அதன்படி, 316 ஆசிரியர்கள் உபரியாக இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, உபரியான ஆசிரியர்களை காலிஇடத்தில் பணியமர்த்த டிசம்பர் மாதம் கலந்தாய்வு நடத்தப்பட்டது. மாவட்டத்துக்குள் 210 பேரும்,வேறு மாவட்டத்துக்கு 61 பேரும்என மொத்தம் 271 ஆசிரியர்கள் பணிநிரவல் பெற்றனர். இந்த கலந்தாய்வு மூலமாக ஏற்பட்ட நிகர காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை அடிப்படையில் விடுதிகளில் பணிபுரியும் காப்பாளர்கள், ஆசிரியர்பணியிடங்களுக்கும், ஆசிரியர்கள் விடுதி காப்பாளர்கள் பணியிடத்துக்கும் பணி மாறுதல் மேற்கொள்ள வசதியாக ஜன.7-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை கலந்தாய்வு நடக்கவிருந்தது.ஆனால், கரோனா தொற்று பரவல்காரணமாககலந்தாய்வு தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில், ஆசிரியர்கள் மற்றும் காப்பாளர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு மாவட்ட அளவிலேயே இணையவழியில் நடக்கவுள்ளது. அதன்படி, இன்று முதல் 4 நாட்களுக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة