செமஸ்டர் தேர்வுகளுக்கு பதிவு செய்யாத மாணவர்களுக்கு புதிய இணையதளம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, January 29, 2022

Comments:0

செமஸ்டர் தேர்வுகளுக்கு பதிவு செய்யாத மாணவர்களுக்கு புதிய இணையதளம்

செமஸ்டர் தேர்வுகளுக்கு பதிவு செய்யாத மாணவர்களுக்கு புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது. இது குறித்து அண்ணா பல்கலைகழக தேர்வுகள் கட்டுப்பாட்டு அதிகாரி வெளியிட்ட அறிக்கை: நவம்பர், டிசம்பர் - 2021 பருவத் தேர்வுகளுக்கு பதிவு செய்யத் தவறிய மாணவர்களுக்காக புதிய இணையதளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி பருவத்தேர்வுகளுக்கு பதிவு செய்ய தவறியவர்கள் https://coe1.annauniv.edu என்ற இணையதளம் சென்று இன்று இரவு 7 மணிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இது குறித்து சந்தேகங்கள் இருப்பின் 044-22357272, 7307, 7303 ஆகிய தொலைப் பேசி எண்களுக்கு மாணவர்கள் தொடர்பு கொள்ளலாம். மேலும் நவம்பர், டிசம்பர் - 2021 பருவத் தேர்வுகளுக்கு ஏற்கனவே பதிவு செய்தவர்கள் மீண்டும் பதிவு செய்யத் தேவையில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews