பள்ளிகளில் குழந்தை திருமணம் குறித்து விழிப்புணர்வு - தொடர்ந்து கண்காணிக்க சி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, January 19, 2022

Comments:0

பள்ளிகளில் குழந்தை திருமணம் குறித்து விழிப்புணர்வு - தொடர்ந்து கண்காணிக்க சி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவு

தமிழகத் தில் இளம்வயது கருத்த ரிப்பை தவிர்க்கும் வகை யில், பள்ளிகளில் குழந்தைகள் திருமணம் குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தி கண்கா ணிக்க வேண்டும் என்று சி.இ.ஓ.,க்களுக்கு உத்தரளது. விடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டுகளாக. 2 கொரோனா ஊரடங்கு காலத்தில் குழந்தை திரு மணங்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித் துள்ளது. மாவட்ட அள வில் குழந்தை பாதுகாப்பு அலுவலர் தலைமையில் ஏற்படுத்தப்பட்டுள்ள குழுக்கள், குழந்தை திரும ணங்களை கண்காணித்து தடுத்து நிறுத்துவதுடன், காவல்துறை மூலம் வழக் குப்பதிவு செய்ய ஏற்பாடு செய்கின்றன. இருந்தபோ திலும் பல திருமணங்கள் நடைபெற்று வருகிறது. இதனால் இளம்வயது கருத்தரிப்பு மற்றும் பிர சவ கால இழப்புகளை சந் திக்க நேரிடுகிறது. இதனி டையே, பள்ளி அளவில் இவற்றை கண்காணிப்பது டன் குழந்தை கிருமணங் தொடர்ந்து கண்காணிக்க சி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவ

குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து மாவட்ட சி.இ.ஓ.,க்களுக் கும் உத்தரவிடப்பட்டுள் இதுகுறித்து கல்வித் துறை அதிகாரிகள் கூறிய தாவது:

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும், குழந்தை திருமணம் குறித்து தொடர்ந்து குழந் தைகளை கண்காணித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்த வேண்டும் என்று சி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத் தில் கடந்த 6 ஆண்டுக ளில், 3,326 இளம் வயது கருத்தரிப்பு நடந்துள் ளது. இதுதொடர்பாக, கிருஷ்ணகிரியில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில், அனைத்து துறை அலுவ லர்களுக்கும் இளம் வயது கருத்தரித்தல் மூலம் ஏற் படும் விளைவுகள் மற் றும் குழந்தை திருமணம் கடுப்படகறிக்கடவிளக்கம்

அளிக்கப்பட்டது. மேலும், கிராமங்கள் வாரியாக துண்டு பிரச்சாரங்கள், போஸ்டர்கள் மற்றும் ஸ்டிக்கர்கள் விநியோகம் செய்து விழிப்புணர்வு ஏற் படுத்த அறிவுத்தப்பட்டது. அத்துடன், அனைத்து துறைகள் மூலம் குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்த பல்வேறு அறிவுறுத் தல்கள் வழங்கப்பட்டன. குறிப்பாக, கல்வித்துறை மூலமாக குழந்தை திரும ணம் குறித்து அனைத்து பள்ளிகளிலும் தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவிக் கப்பட்டது. இதில், 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் மற் றும் 14 வயது முதல் 18 வயது வரை உள்ள மாண விகள், தொடர்ந்து 2 அல் லது 3 நாட்கள் பள்ளிக்கு வரவில்லை என்றால், ஆசிரியர்கள் அவர்களை கண்காணிக்க வேண்டும். இதில் குழந்தை திரும ணம் எனில் 1098 என்ற சைல்டுலைன் எண்ணில், மாவட்ட சமூக நல அலு வலர், குழந்தைகள் பாது காப்பு அலுவலர் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு உடனடியாக தகவல் தெரி விக்க வேண்டும். மேலும், பள்ளிகளில் இடைநின்ற குழந்தைகளின் மீதும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

அத்துடன் பள்ளிகளில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, குழந்தைகளை கண்காணிக்கவும் வேண் டும். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணியாளர்கள்,எந்த கிரா மத்தில் அதிகமாக 18 வய திற்குட்பட்டவர்கள் கர்ப் பிணியாக உள்ளனர் என்ற விவரத்தினை தெரிவிக்க வேண்டும்.இதனை உடன டியாக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக் கும் தெரிவித்து, நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும் என சிஇஓக் களுக்கு உத்தரவிடப்பட் டுள்ளது. இவ்வாறு அதிகா ரிகள் தெரிவிக்கனர்..

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews