சட்டப்படிப்புக்கான கிளாட் 2022 தேர்வு - விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 31 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, January 11, 2022

Comments:0

சட்டப்படிப்புக்கான கிளாட் 2022 தேர்வு - விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 31

நாட்டிலுள்ள பிரபல கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சட்டப்படிப்பை மேற்கொள்ள எழுதவேண்டிய தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு ’காமன் லா அட்மிஷன் டெஸ்ட்’!

முக்கியத்துவம்:22 தேசிய சட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் 40க்கும் மேற்பட்ட இதர கல்வி நிறுவனங்களில் கிளாட் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகின்றன.

இளநிலை பட்டப்படிப்பில் சேர்க்கை பெற கிளாட்- யு.ஜி., தேர்வும், முதுநிலை பட்டப்படிப்பில் சேர்க்கை பெற கிளாட் -பி.ஜி., தேர்வும் எழுத வேண்டும். படிப்புகள்: எல்.எல்.பி., மற்றும் எல்.எல்.எம்., தகுதிகள்:இளநிலை பட்டப்படிப்பான எல்.எல்.பி., படிப்பில் சேர 12ம் வகுப்பில் குறைந்தது 45 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதுநிலை பட்டப்படிப்பான எல்.எல்.எம்., படிப்பில் சேர்க்கை பெற எல்.எல்.பி., அல்லது பி.எல்., படிப்பில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இரண்டு படிப்புகளிலும், எஸ்.சி., / எஸ்.டி., மாணவர்களுக்கு 5 சதவீத மதிப்பெண்கள் விலக்கு உண்டு. கிளாட் தேர்வை எழுத அதிகபட்ச வயது வரம்பு ஏதுமில்லை. தேர்வு முறை:கிளாட் -யு.ஜி., தேர்வில், ஆங்கில மொழி புலமை, பொது அறிவு, லீகல் ரீசனிங், லாஜிக்கல் ரீசனிங் மற்றும் குவாண்டிடேடிவ் டெக்னிக்ஸ் ஆகிய பகுதிகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். இரண்டு மணிநேர கால அளவு கொண்ட இத்தேர்வில் மொத்தம் 150 அப்ஜெக்டிவ் வடிவிலான கேள்விகள் இடம்பெறும்.

கிளாட் - பி.ஜி., தேர்வில் பல்வேறு சட்டப் பாடங்களில் இருந்து மொத்தம் 120 அப்ஜெக்டிவ் வடிவிலான கேள்விகள் இடம்பெறும். இரண்டு தேர்வுகளிலும் ஒவ்வொரு சரியான பதிலுக்கும் தலா ஒரு மதிப்பெண் வழங்கப்படும். ஒவ்வொரு தவறான பதிலுக்கும் தலா 0.25 மதிப்பெண் பிடித்தம் செய்யப்படும்.

பங்குபெறும் முக்கிய பல்கலைக்கழகங்கள்:

* நேஷனல் லா ஸ்கூல் ஆப் இந்தியா யுனிவர்சிட்டி, பெங்களூரு* நல்சார் யுனிவர்சிட்டி ஆப் லா, ஹைதராபாத்* நேஷனால் லா இன்ஸ்டிடியூட் யுனிவர்சிட்டி, போபால்* தி வெஸ்ட் பெங்கால் நேஷனல் யுனிவர்சிட்டி ஆப் ஜுடிசியல் சயின்ஸ், கொல்கத்தா* நேஷனல் லா யுனிவர்சிட்டி, ஜோத்பூர்* ஹிதயத்துல்லா நேஷனல் லா யுனிவர்சிட்டி, ராய்புர்* குஜராத் நேஷனல் லா யுனிவர்சிட்டி, காந்திநகர்* டாக்டர் ராம் மனோகர் லோகியா நேஷனல் லா யுனிவர்சிட்டி, லக்னோ* ராஜீவ் காந்தி நேஷனல் யுனிவர்சிட்டி ஆப் லா, பஞ்சாப்* சாணக்கியா நேஷனல் லா யுனிவர்சிட்டி, பாட்னா* நேஷனல் யுனிவர்சிட்டி ஆப் அட்வான்ஸ்ட் லீகல் ஸ்டடீஸ், கொச்சி* நேஷனல் லா யுனிவர்சிட்டி, ஓடிசா* நேஷனல் யுனிவர்சிட்டி ஆப் ஸ்டடி அண்டு ரிசர்ச் இன் லா, ராஞ்சி* நேஷனல் லா யுனிவர்சிட்டி அண்டு ஜுடிசியல் அகாடமி, அசாம்* தாமோதரம் சஞ்சிவயா நேஷனல் லா யுனிவர்சிட்டி, விசாகப்பட்டிணம்* தமிழ்நாடு நேஷனல் லா ஸ்கூல், திருச்சி* மஹாராஷ்டிரா நேஷனல் லா யுனிவர்சிட்டி, மும்பை* மஹாராஷ்டிரா நேஷனல் லா யுனிவர்சிட்டி, நாக்பூர்* மஹாராஷ்டிரா நேஷனல் லா யுனிவர்சிட்டி, அவுரங்கபாத்* ஹிமாச்சல் பிரதேஷ் நேஷனல் லா யுனிவர்சிட்டி, சிம்லா* தரம்சாஷ்த்ரா நேஷனல் லா யுனிவர்சிட்டி, ஜாபல்பூர்* டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் நேஷனல் லா யுனிவர்சிட்டி, சோனிபட்

விண்ணப்பிக்கும் முறை: https://consortiumofnlus.ac.in/clat-2022/ என்ற இணையதளம் வாயிலாக ஆன்லைன் விண்ணப்பிக்க வேண்டும். மாதிரி கேள்வித்தாள், தேர்வு பாடத்திட்டம் ஆகிய விபரங்களையும் இந்த இணையதளத்தில் இருந்து பெறலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 31.

விபரங்களுக்கு: https://consortiumofnlus.ac.in/

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews