2021-2022 ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் பள்ளி மாணாக்கரின் பெயர்பட்டியலை பதிவேற்றம் செய்வதற்கும், தேர்வு கட்டணம் மற்றும் TML கட்டணம் செலுத்துவதற்கும் கூடுதலாக கால அவகாசம் வழங்கி அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவு - நாள். 19.01.2022 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, January 19, 2022

Comments:0

2021-2022 ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் பள்ளி மாணாக்கரின் பெயர்பட்டியலை பதிவேற்றம் செய்வதற்கும், தேர்வு கட்டணம் மற்றும் TML கட்டணம் செலுத்துவதற்கும் கூடுதலாக கால அவகாசம் வழங்கி அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவு - நாள். 19.01.2022

நாள். 19.01.2022

அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை - 6 - 2021-2022 ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் பள்ளி மாணாக்கரின் பெயர்பட்டியலை பதிவேற்றம் செய்வதற்கும், தேர்வு கட்டணம் மற்றும் TML கட்டணம் செலுத்துவதற்கும் கூடுதலாக கால அவகாசம் வழங்குதல் - தொடர்பாக.

பார்வை :

அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள், நாள்:03.01.2022 இதே எண்ணிட்ட பார்வையில் காணும் இவ்வலுவலகச் செயல்முறைகளில், 2021-2022-ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுக்கான பள்ளி மாணாக்கரின் பெயர்ப்பட்டியல் தயாரிக்கும் பொருட்டு, அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களும் தங்கள் பள்ளியில் பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாமாண்டு பயிலும் மாணாக்கரது விவரங்களை 04.01.2022 முதல் 19.01.2022 வரையிலான நாட்களில் இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்து, தேர்வுக் கட்டணம் மற்றும் TML கட்டணத்தினையும் இணையதளம் வாயிலாக செலுத்தவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில் ஒரு சில பள்ளிகளின் மாணாக்கரின் விவரங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்வதில் சில சிரமங்கள் ஏற்படுகின்றன எனத் தெரியவருவதால், பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாமாண்டு மாணாக்கரின் விவரங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்வதற்கும், இணையதளம் மூலம் தேர்வுக்கட்டணத்தினை செலுத்துவதற்கும் 20.01.2022 முதல் 31.01.2022 வரையிலான நாட்களில் கூடுதலாக கால அவகாசம் வழங்கப்படுகிறது. இதுவே, பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுக்கான பள்ளி மாணவர்களின் பெயர்ப்பட்டியல் தயாரிக்கும் பணிக்காக வழங்கப்படும் கடைசி வாய்ப்பாகும். இதன்பின்னர், இப்பணிக்காக எக்காரணம் கொண்டும் கூடுதல் கால அவகாசம் வழங்கப்படமாட்டாது.

எனவே, அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும், தங்களது ஆளுகைக்குட்பட்ட உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் அனைவரும், பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுக்கான பள்ளி மாணவர்களின் பெயர்ப்பட்டியல் தயாரிக்கும் பணியினை 31.01.2022 -க்குள் நிறைவு செய்வதற்கு உரிய அறிவுரைகளை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews