மீண்டும் மூடப்படுகிறதா பள்ளிகள்.?! முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் விரைவில். - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, December 12, 2021

Comments:0

மீண்டும் மூடப்படுகிறதா பள்ளிகள்.?! முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் விரைவில்.

தமிழகத்தில் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக கொரோனா வைரஸால் தீவிர பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. பின்னர் படிப்படியாக வைரஸ் பாதிப்பு குறையத் துவங்கிய பின்னர் அனைத்து நடைமுறைகளும் வழக்கம் போல ஆரம்பமானது.

அன்றாட வாழ்க்கையே மிகப்பெரிய முடக்கத்திற்கு ஆளானது. இதனால் பள்ளி கல்லூரிகளும் முடக்கப்பட்டது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் சமீப காலமாகத்தான் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

இதற்கு முன்பு ஆன்லைன் மூலமாக வகுப்புகளும், தேர்வுகளும் நடத்தப் பட்டு வந்தது. இத்தகைய நிலையில் தென்னாப்பிரிக்காவில் அதிக வீரியம் கொண்ட புதிய உருமாறிய கரோனா வைரஸ் பரவத் துவங்கி உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

இத்தகைய சூழலில், இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று பரவத் துவங்கியுள்ளது. எனவே பள்ளிகளை மூடுவது குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் விரைவில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். மீண்டும் பள்ளிகள் மூடும் நிலை ஏற்படக் கூடும் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews