தொழிற்கல்வி மற்றும் கணினி பயிற்றுநர்களின் விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, December 23, 2021

Comments:0

தொழிற்கல்வி மற்றும் கணினி பயிற்றுநர்களின் விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

தொழிற்கல்வி மற்றும் கணினி பயிற்றுநர்களின் விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!
பள்ளிக்கல்வி அரசு/அரசு உதவிபெறும் பள்ளிகளில் தொழிற்கல்வி பிரிவில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை, அரசால் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் பணிவரன்முறை செய்யப்பட்டு பணிபுரியும் தொழிற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் கணினி பயிற்றுநர்களின் எண்ணிக்கை விவரம் அனுப்பக் கோருதல் - சார்பு. அரசு/அரசு உதவிபெறும் பள்ளிகளில் தொழிற்கல்வி பிரிவில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை, தொழிற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் கணினி பயிற்றுநர்களின் எண்ணிக்கை விவரம் (as per EMIS) உள்ள படிவங்கள் (1 மற்றும் 2) இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. இதனை சரிபார்த்து படிவம் 3-ல் பாடவாரியாக மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் படிவம் 4-ல் அரசால் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் பணிவரன்முறை செய்யப்பட்டு பணிபுரியும் தொழிற்கல்வி ஆசிரியர்கள் எண்ணிக்கை பாடவாரியாகவும் மற்றும் கணினி பயிற்றுநர்கள் நிலை -1, 2 பணிபுரிபவர்களின் எண்ணிக்கையும் பூர்த்தி செய்து முதன்மைக்கல்வி அலுவலர் கையொப்பமிட்டு 28.12.2021 நாளன்று நடைபெறும் முதன்மைக்கல்வி அலுவலர்கள் கூட்டத்தின்போது நேரில் வழங்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews