Breaking

Thursday, December 23, 2021

அமைச்சர் அன்பில் மகேசுக்கு தி.மு.க., புகழ்ச்சி போஸ்டர்

அதிமுக ஆட்சிக் காலத்தில், முதல்வர், அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மட்டுமின்றி அவர்களது வாரிசுகளையும் புகழ்ந்து, ஆளும்கட்சியினர் போஸ்டர், பிளக்ஸ் பேனர்கள் வைப்பதை சாதாரணமாகப் பார்க்க முடியும்.

ஆனால் தற்போது அவர்களை மிஞ்சும் வகையில், நெல்லையில் ஆளும் திமுகவினர் அமைச்சர், கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் வருகையின் போது, அவர்களுக்கு புகழ்ச்சி மாலைகளைச் சூட்டி போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர்.
குறிப்பாக கட்சி மேலிடத்திற்கு நெருக்கமானவர்கள் வந்தால் கேட்கவே வேண்டாம்... போஸ்டர்களை ஐஸ் மழை பொழிவது மிகுந்துவிடுகிறது.

இந்நிலையில் நெல்லையில் இன்று ஆய்வுக்கூட்டம் நடத்தும், முதல்வர் ஸ்டாலினின் மகனும் எம்எல்ஏவுமான உதயநிதிக்கு மிக நெருக்கமான பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஐ வரவேற்க, 'கல்வித் துறையை மீட்க வந்த நவீன பாரதியாரே' எனப் புகழ்ந்து திமுகவினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog