நெல்லை மாணவர்கள் பலி: மீட்பு நடவடிக்கைக்கு உதவாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأحد، ديسمبر 19، 2021

1 Comments

நெல்லை மாணவர்கள் பலி: மீட்பு நடவடிக்கைக்கு உதவாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருநெல்வேலியில் பள்ளி சுவர் இடிந்து மூன்று மாணவர்கள் இறந்த சம்பவத்தில் மீட்பு நடவடிக்கைக்கு உதவாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.திருநெல்வேலி சாப்டர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்ததில் மூன்று மாணவர்கள் இறந்தனர். நான்கு மாணவர்கள் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் பள்ளியின் தாளாளர் செல்வகுமார், தலைமையாசிரியை பெர்சிஸ் ஞானசெல்வி, கட்டட ஒப்பந்ததாரர் ஜான்கென்னடி கைது செய்யப்பட்டனர்.

நெல்லை 4வது ஜெ.எம்., நீதிமன்ற நீதிபதி ஜெய்கணேஷின் குடியிருப்பில் ஆஜர்படுத்தப்பட்டனர். டிசம்பர் 31 வரை அவர்களை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். தலைமையாசிரியை பெர்சிஸ் ஞானசெல்விக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதாக கூறி நெல்லை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

நுாற்றுக்கணக்கான சிறுபான்மை பள்ளிகளை நடத்தி அரசு நிதியுதவி பெறும் சி.எஸ்.ஐ., சபையின் லே செயலர் உள்ளிட்ட நிர்வாகம் மாறும்போது தலைமையாசிரியர், தாளாளர் உள்ளிட்டோரை மாற்றிவிடுகின்றனர். அவர்களின் பணி அனுபவம் குறித்து கவனிப்பதில்லை. சாப்டர் பள்ளியில் முந்தைய தலைமையாசிரியாக இருந்த ஜெபக்குமார் என்பவரை மாற்றிவிட்டு பெர்சிஸ் ஞானசெல்வியை நியமித்துள்ளனர்.

1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் பள்ளியை, முந்தைய தலைமையாசிரியர் தினமும் சுற்றிவந்து கவனிப்பார். மாணவர்களுடன் பேசுவார். சுவர் இடிந்து விழுந்து மாணவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தபோதும் சக மாணவர்கள் மட்டும் தான் அவர்களை மீட்டுள்ளனர்.பள்ளியின் பெரும்பாலான ஆசிரியர்கள் காரில் வருகின்றனர். ஆனால் மாணவன் சுதீஷ் மூர்ச்சையாகி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். மேலும் நான்கு பேர் காயத்துடன் தவித்தனர். அப்போதும் ஆம்புலன்ஸ்க்காக காத்திருந்தனரே தவிர, தங்கள் கார்களில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்லவில்லை. இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டும் பொதுமக்கள், மாணவர்கள் சம்பவத்தின் போது உதவாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என, போலீசார் நடத்திய விசாரணையின் போது தெரிவித்துள்ளனர்.

இரங்கல் இல்லை

சி.எஸ்.ஐ., பிஷப், லே செயலர், சி.எஸ்.ஐ., சபை நிர்வாகத்தில் இருக்கும் திருநெல்வேலி தி.மு.க., எம்.பி., ஞானதிரவியம் ஆகியோர் மாணவர்கள் இறப்பிற்கு இதுவரை இரங்கல் தெரிவிக்கவில்லை. சம்பவ இடத்திற்கும் வரவில்லை. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறவுமில்லை என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.17 குழுக்கள் நியமனம்திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளிக்கட்டடங்களின் உறுதித்தன்மை குறித்து அறிய வருவாய்த் துறை, ஊரகவளர்ச்சி துறை, மாநகராட்சி உள்ளிட்ட துறை அதிகாரிகளை கொண்ட 17 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இவர்கள் ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கையளிப்பார்கள் என கலெக்டர் விஷ்ணு தெரிவித்தார்.

هناك تعليق واحد:

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة