ஓய்வு பெறுபவர்களுக்கு பாண்ட் பத்திரமா: அதிர்ச்சியில் அரசு ஊழியர்கள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, December 18, 2021

Comments:0

ஓய்வு பெறுபவர்களுக்கு பாண்ட் பத்திரமா: அதிர்ச்சியில் அரசு ஊழியர்கள்

ஓய்வு பெறுபவர்களுக்கு பணப்பலன் எப்படிக் கொடுப்பது என்பது முக்கிய கேள்வியாக இருக்கிறது.

அனைவருக்கும் பாண்ட் பத்திரம் கொடுத்து அனுப்ப முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்ற தகவலால் அரசு ஊழியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

கடந்த அதிமுக ஆட்சியில் நிதிப் பற்றாக்குறையால் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறக்கூடிய வயது 59ஆக நீட்டிக்கப்பட்டது. 2021இல் திமுக ஆட்சி பொறுப்பேற்று முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றதும் 59 வயதை 60ஆக உயர்த்தி அரசாணையை வெளியிட்டார், இதனால் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மற்றொரு பக்கம், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கொடுக்க காலியிடங்களை நிரப்பாமல் அரசு தவிர்த்து வருகிறது என்று குற்றச்சாட்டுகளும் எழுந்தன.

இந்த நிலையில் வரும் 2022 ஜனவரி மாதம் 5ஆம் தேதி கூடும் தமிழகச் சட்டப்பேரவை கூட்டத்தொடரில், அரசு ஊழியர்களின் ஓய்வு வயது தொடர்பாக, தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிடலாம், அதன்படி 33 வருடங்கள் அரசு பணி செய்தவர்கள் 58 வயதிலும், மற்றவர்கள் 60 வயதிலும் ஓய்வு பெறலாம் என்று அறிவிக்கப்படலாம் எனத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுமட்டுமல்ல. "நிதி சுமையால்தான் அரசு ஊழியர்களின் பணி ஓய்வு வயதை உயர்த்தியது, தற்போது ஓய்வு பெறும் வயதை 58ஆகக் குறைத்தால் பல ஆயிரம் பேர் ஓய்வு பெறுவார்கள். அவர்களுக்குப் பணப்பலன் எப்படிக் கொடுப்பது என்பது முக்கிய கேள்வியாக இருக்கிறது. அனைவருக்கும் பாண்ட் பத்திரம் கொடுத்து அனுப்ப முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்றும் கோட்டை வட்டாரத்தில் இருந்து தகவல்கள் கசிகின்றன.

33 வருடங்கள் உழைத்துப் பணி ஓய்வுபெறும்போது நிம்மதியான வாழ்க்கை வாழ நினைப்பவர்களுக்குப் பத்திரம் கொடுப்பது கொடுமையானது. இப்படி ஒரு செயலை முதல்வர் செய்தால், ஒட்டுமொத்த அரசு ஊழியர்களின் குடும்பங்களும் அரசுக்கு எதிரான போராட்டத்தில் இறங்கும், அதன் விளைவை அடுத்த தேர்தலில் சந்திப்பார்" என்று அரசு ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews