இட ஒதுக்கீட்டு கொள்கை மற்றும் சமூக நிதி குறித்த புத்தகம் - நிர்வாக அனுமதி வழங்கி அரசாணை வெளியீடு!
அரசாணை (நிலை) எண். 61 நாள் 12.11.2021
ஆணை:
2021-2022 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் "தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்து வரும் இடஒதுக்கீட்டுக் கொள்கை பற்றியும், சமூக நீதிசெயல்பாடுகள் பற்றியும் வருங்கால சந்ததியினர் அறிந்து கொள்ளும் வகையில் இடஒதுக்கீடு மற்றும் சமூக நீதி குறித்து பல்வேறு தகவல்கள் கொண்ட புத்தகம் 5 இலட்சம் ரூபாய் செலவில் வெளியிடப்படும்" என அறிவிப்பு வெளியிடப்பட்டது. 2) மேற்காணும் அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக பெறப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் நல இயக்குநரின் கருத்துருவில் தமிழ்நாட்டிலுள்ள இட ஒதுக்கீடு மற்றும் சமூக நீதி குறித்து பல்வேறு தகவல்கள் கொண்ட புத்தகம் தயாரித்து வெளியிட கல்வியாளர்கள். கல்லூரிப் பேராசிரியர்கள். இடஒதுக்கீடு தொடர்பான வல்லுநர்கள், பிற்படுத்தப்பட்டோர் நல ஆணைய அலுவலர்கள், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்கக அலுவலர்கள் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்கக அலுவலர்களையும் கொண்டு குழு அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் இதற்கென நடப்பு நிதியாண்டில் ரூ.5.00 இலட்சம் நிதி ஒதுக்கம் செய்து ஆணை பிறப்பிக்குமாறு அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
3) இக்கருத்துரு அரசால் நன்கு ஆய்வு செய்யப்பட்டு. தமிழ்நாட்டிலுள்ள இட ஒதுக்கீடு மற்றும் சமூக நீதி குறித்து பல்வேறு தகவல்கள் கொண்ட புத்தகத்தை பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம் மூலம் ரூ.5.00 இலட்சம் (ரூபாய் ஐந்து இலட்சம் மட்டும்) செலவில் வெளியிட நிர்வாக ஒப்புதல் வழங்கி அரசு ஆணையிடுகிறது.
4) புத்தகம் தயாரித்து வெளியிட குழு அமைக்கப்பட்டபின் செலவின விவரங்களுடன் நிதி ஒப்பளிப்பிற்கான கருத்துருவை அனுப்பி வைக்குமாறு பிற்படுத்தப்பட்டோர் நல இயக்குநர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்.
5) இவ்வரசாணை நிதித்துறையின் அலுவல் சார்பற்ற எண்.49309/நிதி (பி.மி.பி (ம) சி.ந) துறை. நாள்.10:11.2021-ன்படி நிதித்துறையின் இசைவுடன் வெளியிடப்படுகிறது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.