இல்லம் தேடிக் கல்வி மையங்களுக்கான, கற்றல் கற்பித்தல் பொருள்கள் மாவட்டங்களில் வாங்குவதற்கு நிதி ஒதுக்கீடு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الثلاثاء، نوفمبر 30، 2021

Comments:0

இல்லம் தேடிக் கல்வி மையங்களுக்கான, கற்றல் கற்பித்தல் பொருள்கள் மாவட்டங்களில் வாங்குவதற்கு நிதி ஒதுக்கீடு.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - இல்லம் தேடிக் கல்வி மையங்களுக்கான, கற்றல் கற்பித்தல் பொருள்கள் மாவட்டங்களில் வாங்குவதற்கு அறிவுறுத்துதல் - தொடர்பாக, மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள்.

கரோனா பெருந்தொற்றுப் பரவல் காலத்தில் 1 முதல் 8 வகுப்புகள் வரை உள்ள மாணவர்களிடையே ஏற்பட்ட கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை ஈடுசெய்வதற்காகவும் , இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து மீண்டும் பள்ளிகளில் சேர்ப்பதற்காகவும் , தன்னார்வலர்களைக் கொண்டு தினசரி 1 முதல் 1 % மணிநேரம் ( மாலை 5.00 மணி முதல் 7.00 மணிக்குள் ) கற்றல் செயல்பாடுகளை மேற்கொள்ள " இல்லம் தேடிக் கல்வி மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இல்லம் தேடிக் கல்வி மையங்களுக்கென தெரிவு செய்யப்பட்டு வரும் தன்னார்வலர்களுக்கு பிரிவுவாரியாக இரண்டு நாள்கள் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றன. பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள் அவர்களுடன் இணைக்கப்பட்டுள்ள பள்ளிக்கு சென்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடி அறிமுகம் ஏற்படுத்துவதற்காகவும் , பள்ளி செயல்பாடுகளை அறிந்துகொள்வதற்காகவும் , ஒரு நாள் உற்றுநோக்கல் பயிற்சிக்கு பள்ளிகளுக்கு செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள் . பின்பு தன்னார்வலரின் குடியிருப்பு பகுதியிலுள்ள மாணவர்கள் அவர்களுடன் இணைக்கப்பட்டு , பள்ளி மேலாண்மைக் குழு ஒப்புதலுடன் இல்லம் தேடிக் கல்வி மையங்கள் பிரிவுவாரியாக ( தொடக்கநிலை / உயர்தொடக்கநிலை ) அதற்கென தெரிவு செய்யப்பட்ட இடங்களில் தொடங்கப்படவேண்டும் . இல்லம் தேடிக் கல்விமையத்தில் கோவிட் -19 நோய்த் தொற்று பரவாமல் இருக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவேண்டும். மேலும் , அரசின் சுகாதாரத்துறை வாயிலாக வழங்கப்பட்டுள்ள வழிக்காட்டு நெறிமுறைகள் அனைத்தும் முழுமையாகப் பின்பற்ற வேண்டும் . மேலும் , இல்லம் தேடிக் கல்வி மையத்தில் மாவட்டம் , கிராமம் , குடியிருப்பின் பெயர் , இல்லம் தேடிக் கல்வி மையத்தின் பெயர் போன்ற விபரங்கள்அடங்கிய flex Banner name board வைக்கப்பட வேண்டும் . இதற்கான வடிவமைப்பு விரைவில் அனுப்பப்படும். இதற்குரிய செலவினத்தை இல்லம் தேடிக் கல்விக்கென மாவட்ட இதர வங்கி கணக்கிற்கு விடுவிக்கப்பட்டுள்ள நிதியில் IEC தலைப்பின் கீழ் மேற்கொள்ள வேண்டும் . இல்லம் தேடிக் கல்வி மையங்களில் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் நன்முறையில் நடைபெறுவதற்காக தன்னார்வலர்களுக்கு கையேடு . அட்டைகள் ( cards ) மற்றும் சுவரொட்டிகள் ( posters ) கீழ்கண்டவாறு பிரிவுவாரியாக ( தொடக்கநிலை / உயர்தொடக்கநிலை ) ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.

Emailing Letter to districts for TLM to ITK centres.pdf - Download here...

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة