‘பகுதிநேர ஆசிரியர்கள் படிப்படியாக நிரந்தரமாக்கப்படுவார்கள்' - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, November 12, 2021

Comments:0

‘பகுதிநேர ஆசிரியர்கள் படிப்படியாக நிரந்தரமாக்கப்படுவார்கள்'

தமிழகத்தில் உள்ள பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் மழை பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் பள்ளிகள் தொடர்ச்சியாக விடுமுறை விடப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில்,பொதுத்தேர்வை மாணவர்கள் பயமின்றி எழுத நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், “பொதுத்தேர்வை மாணவர்கள் பயமின்றி எழுத நடவடிக்கை எடுக்கப்படும். அந்த வகையில், மாணவர்களின் பயத்தைப் போக்க அரையாண்டு, முழு ஆண்டுத் தேர்வுக்கு பதிலாக ஜனவரி, மார்ச் மாதங்களில் மாதிரித் தேர்வு நடத்தப்படும்.

பகுதி நேர ஆசிரியர்கள் படிப்படியாக பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள், அதற்கான நடவடிக்கையை முதல்வர் எடுப்பார்” என்று கூறினார்.

இதுகுறித்து பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார், “சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போதே பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்வதாக திமுக சார்பில் உறுதியளிக்கப்பட்டது. தேர்தல் அறிக்கையிலும் வாக்குறுதி அளிக்கப்பட்டது. பள்ளிக்கல்வித் துறையில் கடந்த 10 ஆண்டுகளில் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் கேட்டு பல வழிகளில் கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனாலும் இன்னும் தொகுப்பூதியத்திலே தான் பணியாற்றி வருகிறோம். இவ்வாறு பணிபுரிந்து வரும் சூழலில் பலருக்கு 40 முதல் 55 வயது ஆகிவிட்டது. அவர்கள் வேறு எவ்வித பணிக்கும் செல்ல இயலாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு பணிபுரிந்து வரும் பகுதிநேர ஆசிரியர்களின் வாழ்வாதாரமானது மிகுந்த பாதிப்பில் இருக்கிறது. எங்களை காலமுறை ஊதியத்தில் பணியமர்த்தி, நிரந்தரம் செய்ய வேண்டும். பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தர கோரிக்கையை உடனே நிறைவேற்ற வேண்டும்” என்று பலமுறை கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews