ஆன்லைனில் பாடம்; நேரில் தேர்வா? பெற்றோர், மாணவர்கள் கடும் எதிர்ப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, November 18, 2021

Comments:0

ஆன்லைனில் பாடம்; நேரில் தேர்வா? பெற்றோர், மாணவர்கள் கடும் எதிர்ப்பு!

-'ஆன்லைன் வழியிலேயே பாடங்களை நடத்தியதால், செமஸ்டர் தேர்வையும் ஆன்லைன் வழியிலேயே நடத்த வேண்டும்' என, கல்லுாரி மாணவர்களும், பெற்றோரும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில், கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளால், பள்ளி, கல்லுாரிகளில் ஆன்லைன் வழியிலேயே பாடங்கள் நடத்தப்பட்டன. செப்டம்பர் 1முதல், கல்லுாரிகளுக்கு, மாணவர்களை நேரடியாக வரவழைத்து பாடம் நடத்த அரசு உத்தரவிட்டது.சமூக இடைவெளிஇதன்படி, கல்லுாரிகளில் நேரடி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. பெரும்பாலான கல்லுாரிகளில், சுழற்சி முறை மற்றும் சமூக இடைவெளிப்படி வகுப்பறை அமைப்பதில் இடப்பற்றாக்குறை உள்ளதால், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, இன்னும் ஆன்லைன் வகுப்புகள் தான் நடத்தப்படுகின்றன.இந்நிலையில், டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வை, நேரடியாக நடத்த உயர்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். கடந்த மே, ஜூனில் நடத்தியதை போன்றே, இந்த முறையும் ஆன்லைன் வழியில் தேர்வை நடத்த வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து, மாணவர்கள் மற்றும் பெற்றோர் கூறியதாவது:டிசம்பர் மாத செமஸ்டருக்கான பெரும்பாலான வகுப்புகள் ஆன்லைன் வழியிலேயே நடத்தப்பட்டன. பல இன்ஜினியரிங் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் இன்னும் துவங்கவில்லை.பயிற்சி வகுப்புகள்அறிவியல், தொழிற்கல்வி படிப்புகளில் ஆய்வக பயிற்சி வகுப்புகளை கூட நேரில் நடத்தவில்லை. ஆய்வக உபகரணங்களை கூட மாணவர்கள் பார்க்கவில்லை. இந்நிலையில், ஆய்வகத்தையே பார்க்காமல், மாணவர்கள் எப்படி நேரடி தேர்வில் பங்கேற்க முடியும்.பல மாவட்டங்களில் கிராமப் புறங்களில் இணையதள 'சிக்னல்' பிரச்னை ஏற்பட்டதால், பலர் ஆன்லைன் வகுப்புகளிலும் முழுமையாக பங்கேற்க முடியவில்லை. பேராசிரியர்கள் உரிய நேரத்தில் பாடங்களை முடிக்கவில்லை. பேராசிரியர்கள் பலருக்கே டிசம்பர் மாத 'போர்ஷன்' தெரியாத நிலை உள்ளது. வகுப்புகளை திட்டமிட்டு நடத்தாமல், நேரடி தேர்வை மட்டும் திடீரென அறிவிப்பது மாணவர்களின் எதிர்காலத்தில் விளையாடுவதாக உள்ளது. தேர்ச்சி மதிப்பெண்வகுப்பு எடுப்பதில் ஏற்பட்ட குளறுபடிகளால், நேரடி தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெற முடியாமல் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, ஆன்லைன் வழி தேர்வுக்கான வாய்ப்பளித்தால் மட்டுமே, மாணவர்களால் வீட்டில் இருந்தவாறு, அச்சமின்றி தேர்வு எழுதி, ஓரளவுக்கு தேர்ச்சி மதிப்பெண் பெற முடியும். இதில் தமிழக முதல்வர் தலையிட்டு, மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.உயர்கல்வித் துறையினர் கூறுகையில், 'கல்வியின் தரத்தை மேம்படுத்தவும், மாணவர்களின் கற்றல் திறனை அறிந்து கொள்ளவும், நேரடி தேர்வு முறை அவசியம்' என்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews