மக்களை தங்கவைக்க பள்ளிகளை திறக்க பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, November 07, 2021

Comments:0

மக்களை தங்கவைக்க பள்ளிகளை திறக்க பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவு.

சென்னையில் 2 நாட்களுக்கு மிக பலத்த மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் பேட்டியளித்தார். சென்னை, திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் கனமழை தொடரும் எனவும் கூறப்பட்டுள்ளது. வங்கக்கடலில் 9-ம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று வடதமிழகம் நோக்கி நகரும் என கூறியுள்ளது. காற்றழுத்த தாழ்வு வலுப்பெறுவதால் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. சென்னையில் நள்ளிரவு ஒரு மணி முதல் 1.45 மணிக்குள் 6 செ.மீ. மழை பெய்துள்ளது. சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்பில்லை என்று கருதப்பட்ட நிலையில் மிக பலத்த மழை பெய்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை தங்கவைக்க பள்ளிகளை திறக்க பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் பள்ளிகளை திறந்து வைக்க தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. பள்ளி வளாகத்தில் தண்ணீர் தேங்காமல் இருப்பதையும், மின் இணைப்பு முறையாக இருப்பதையும் உறுதி செய்ய சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மழைநீர் சேகரிப்பு மற்றும் குடிநீர் தொட்டிகளை மூடி முறையாக வைக்கவும் பள்ளிக்கல்வித்துறைக்கு தகவல் கூறப்பட்டுள்ளது. கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்க 1700 பள்ளிகளில் தயார் நிலையில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews