குழந்தைகள் உலகை மீட்டெடுப்போம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, November 14, 2021

Comments:0

குழந்தைகள் உலகை மீட்டெடுப்போம்!

''கொரோனா ஊரடங்கு குழந்தைகளின் உலகை பல மடங்கு சுருக்கிவிட்டது. அவர்களின் உலகை மீட்டெடுப்பதையே இந்த குழந்தைகள் தின குறிக்கோளாக கொள்வோம்'' என்று கூறுகிறார். குழந்தைகள் நல மருத்துவர் ஹேமா.

ரெயின்போ மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவர் ேஹமா நம்மிடம் பகிர்ந்தவை: ஊரடங்கில் வீட்டிலே இருந்ததால் மனதளவில், உடலளவில் அதிக பிரச்னைகளை குழந்தைகள் சந்திக்க வேண்டி இருந்தது. நண்பர்களுடன் இணைந்து விளையாட முடியாமல் போனது, படிப்பது குறைந்தது, பொழுதுபோக்கு அம்சங்கள் சுருங்கிவிட்டது, ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்கியது மற்றும் பாலியியல் ரீதியான பிரச்னைகளும் மனதளவில் குழந்தைகளை அதிக தாக்கத்தை ஏற்படுத்தின.

குறிப்பாக, உடலளவில், எடை அதிகரிப்பு பிரச்னையை அதிக குழந்தைகள் சந்தித்துள்ளனர். மாவுசத்துள்ள உணவுப்பொருட்களை அதிகம் எடுத்து, நார்ச்சத்துள்ள உணவுகளை குறைவாக எடுப்பதே இதற்கு காரணம். 'பாஸ்ட்புட்', பேக்கரி உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிட சொல்லித்தர வேண்டும்.

'சிப்ஸ்' வகைகள் தெரிந்த குழந்தைகளுக்கு கீரை வகைகள் பெயர்கள் கூட தெரியவில்லை. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். தற்போது பள்ளிகளில் திறந்து விட்டன. பெற்றோர்கள் முன்பை விட கண்காணிப்போடு இருக்க வேண்டும். அதிக நேரம் மைதானங்களில் விளையாட அனுமதிக்க வேண்டும். 'குட் டச்; பேட் டச்' பற்றி சொல்லித்தர வேண்டும். பெற்றோர்கள் குழந்தைகள் சொல்லும் கருத்துக்களை உள்வாங்கி நேர்மறையோடு அணுக வேண்டும். செல்லப்பிராணிகளிடம் இருந்தும் குழந்தைகளுக்கு சில நோய்த்தொற்றுகள் உண்டாகின்றன. அவற்றை கையாளுவதில் கவனமாக இருக்க வேண்டும். இரண்டு வயது வரை குழந்தைகளுக்கு கேட்ஜெட்டுகளை அறிமுகப்படுத்தக் கூடாது. இரண்டு முதல் நான்கு வயது குழந்தைகளுக்கு அதிகபட்சம் அரை மணி நேரம் பார்க்க அனுமதிக்கலாம். பெற்றோர்களுக்கு இணையாக ஆசிரியர்களுக்கும் இதில் முக்கிய பங்கு உண்டு.

ஒரு காலத்தில் நல்லது கெட்டதை சொல்லித்தர, 'மாடல் சயின்ஸ்' பாட வகுப்பு பள்ளிகளில் இருந்தது. மீண்டும் இதனை அமல்படுத்த வேண்டும். அரசு பரிந்துரைக்கும் பட்சத்தில் தடுப்பூசி அவசியம் குழந்தைகளுக்கு எடுத்து கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews