சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே 2வது முறையாக நீட் தேர்வு எழுதிய மாணவன் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காததால் தற்கொலை செய்துக்கொண்டார். தலைவாசலை அடுத்த வடகுமரை கிராமத்தை சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் என்ற மாணவர் மருத்துவம் படிப்பதற்காக வீரகனூரில் உள்ள தனியார் மையத்தில் பயிற்சி பெற்றார். கடந்த ஆண்டு 156 மதிப்பெண் வாங்கிய அவர், இந்த முறை 261 மதிப்பெண் பெற்றார்.
பட்டியலினத்தை சேர்ந்த சுபாஷ், இந்த ஆண்டும் தமக்கு மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு இடம் கிடைக்காது என்று முடிவு செய்து 2ம் தேதி வீட்டில் இருந்த பூச்சு மருந்தை குடித்துவிட்டார். மயங்கி விழுந்த அவரை சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். 3 நாட்களுக்கு பிறகு சிகிச்சை பலன் தராமல் சுபாஷ் இறந்துவிட்டார். இதுகுறித்து தலைவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவரின் சடலத்தை உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
بحث هذه المدونة الإلكترونية
السبت، نوفمبر 06، 2021
Comments:0
சேலம் அருகே நீட் தேர்வு எழுதிய மாணவர் விஷமருந்தி தற்கொலை..!!
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.