தமிழக மின்வாரியத்தில் தொழில் பழகுநர் பயிற்சி: நேர்காணலுக்கு அழைப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، نوفمبر 03، 2021

Comments:0

தமிழக மின்வாரியத்தில் தொழில் பழகுநர் பயிற்சி: நேர்காணலுக்கு அழைப்பு

மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘மின்வாரியத்தில் தொழில் பழகுநர் பயிற்சிக்கான நேர்காணல் வரும் 8, 9, 10ம் தேதிகளில் நடக்கிறது. இது சென்னை, அண்ணா மெயின்ரோட்டில் உள்ள தெற்கு மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் காலை 10.30 மணி முதல் மாலை 5.15 மணி வரை நடக்கிறது. ஓராண்டு நடக்கும் இப்பயிற்சிக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.8050 வழங்கப்படும். நேர்காணலில் கலந்து கொள்வதற்காக வருபவர்கள் 10, 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஐடிஐ, என்டிசி/தற்காலிக சான்று, சாதி சான்று, ஆதார் அட்டை, வேலைவாய்ப்பு பதிவு அட்டை, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை ஆகியவற்றின் அசல் ஆவணங்கள் மற்றும் 2 நகல்களை எடுத்து வர வேண்டும். படிகள்வழங்கப்பட மாட்டாது. பணி விவரம்: எலக்ட்ரீஷியன் 168, கம்பியாளர் 177, சர்வேயர் 6, கணினி இயக்குனர் 15, கருவி மெக்கானிக் 12, வரைவாளர்/இயந்திரவியல் 12 என மொத்தம் 390 இடங்கள்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة