கல்வித்துறை தாமத அறிவிப்பால் பள்ளிகளில் மாணவர்கள் வருகை இல்லை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, November 13, 2021

Comments:0

கல்வித்துறை தாமத அறிவிப்பால் பள்ளிகளில் மாணவர்கள் வருகை இல்லை

புதுச்சேரி மாநில கல்வித்துறை இயக்குன ரின் தாமதமான அறிவிப்பால் காரைக்கால் மாவட்டத்தில் நேற்று பள்ளிகள் திறக்கப்பட் டும் மாணவர்கள் வருகை இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையை கடந்தது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, திருவாரூர் உட்பட காவிரி டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்தது. கனமழை காரணமாக காரைக்காலில் இயங்கிவந்த 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பள் ளிகளுக்கு விடுமுறை அளிக்கப் பட்டது.

அதோடு மட்டுமல் லாமல் 1 ம் வகுப்பு முதல் 8ம் தினகரன் வரை வரையில் திறக்கப்பட விருந்த பள்ளிகள் காலவரை யற்று ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் புதுச்சேரி பள்ளி கல்வித்துறை இயக் குனர் ருத்ரகவுடு அறிவிப்பு ஒன்றை காலதாமதமாக வெளி யிட்டார். அதாவது 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் நேற்று (12ம் தேதி) முதல் வழக்கம் போல் இயங்கும் என்றும், 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறப்பு அடுத்த அறிவிப்பு வரும் வரை ஒத்தி வைக்கப்படுவதாக தெரி வித்திருந்தார்.

அதேபோல தேசிய திறனறி தேர்வில் கலந்து கொள்ளும் மாணவர்கள் தேர்வெழுத செல்லலாம் என்றும், இதில் 14 ஆயிரத்து 749 மாணவர்கள் பங்கேற்கின்றனர் என்றும்

அந்த செய்திக்குறிப்பில் தெரி வித்திருந்தார். இந்நிலையில் காரைக்கால் கல்வித்துறை சார்பாக இது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. புதுச்சேரி கல்வித்துறை அதி காரியின் இந்த அறிவிப்பு காலதாமதமாக காரைக்கா லில் வெளியிடப்பட்டதால் காரைக்கால் மாணவர்களுக்கு இதுகுறித்த தகவல் ஏதும் சென்றடையவில்லை. இதன் காரணமாக காரைக்காலில் பள்ளிகள் திறந்து இருந்தபோ தும் மாணவர்கள் யாரும் வரவில்லை. ஆசிரியர்களும் பெருமளவில் வரவில்லை. பள்ளிகளில் ஆசிரியர்களும், மாணவர்களும் வருகையின்றி வெறிச்சோடி காணப்பட்டது. ஒரு சில ஊழியர்கள் மட்டும் வந்திருந்தனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews