கனமழை எதிரொலி.. கல்லூரிக்கு 15 நாட்கள் விடுமுறை அறிவிப்பு..!
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த 1-ம் தேதி முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.
காஞ்சிபுரம், திருவாரூர், செங்கல்பட்டு, சென்னை, கடலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. அதனால், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், கடந்த வாரங்களில் மழை சற்று ஓய்ந்த நிலையில் தற்போது தெற்கு வங்கக் கடல் பகுதியில் இலங்கையை ஒட்டிய தமிழக கடலோரத்தில் வளிமண்டல காற்று சுழற்சி நிலவுவதால் மீண்டும் வடகிழக்கு பருவமழை தீவிரம் எடுத்துள்ளது.
அதனால், தமிழகம் முழுவதும் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று பெய்யத் தொடங்கிய கனமழை இடைவிடாது பெய்து கொண்டிருக்கிறது. இதனால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது பெய்து வரும் கனமழை அடுத்த 4 நாட்களுக்கு தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து கனமழை பெய்து வரும் தூத்துக்குடி, நெல்லை, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு தென்காசி, திருவாரூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் மாணவர்களின் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், திருச்சி மாவட்டத்தில் உள்ள தேசியக் கல்லூரி அருகே உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை தனியார் ஆக்கிரமித்துள்ளனர். இதனால், கல்லூரி முழுவதும் முழுவதும் மழை நீர் குளம்போல் தேங்கியுள்ளது. இதன் காரணமாக, திருச்சி தேசியக் கல்லூரிக்கு 15 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.