பஞ்சாபில் 10ம் வகுப்பு வரையில் அனைத்து மாணவர்களுக்கும் பஞ்சாபி மொழி கட்டாயப் பாடமாக்கி அம்மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி உத்தரவிட்டுள்ளார்.
பஞ்சாபில் நேற்று (நவ.,11) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பஞ்சாபி மொழி தொடர்பான, 'பஞ்சாபி மற்றும் பிற மொழிகள் கல்வி திருத்த மசோதா', 'பஞ்சாப் மாநில மொழி திருத்த மசோதா' உட்பட 15 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக அம்மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தெரிவித்துள்ளதாவது:
பஞ்சாப் மாநிலத்தில் அனைத்து பள்ளிகளிலும் பயிலும் 1 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பஞ்சாபி மொழி கட்டாயப் பாடமாக்கப்படுகிறது. இந்த உத்தரவை மீறும் பள்ளிகளுக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்படும். மேலும், அலுவலகங்களிலும் பஞ்சாபி கட்டாய மொழியாக்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பெயர் பலகைகளிலும் பஞ்சாபி மொழிதான் முதன்மையானதாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.