செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்ட அறிக்கை. இஸ்லாமிய சமுதாயத்தை சார்ந்த ஆதரவற்ற மற்றும் ஏழ்மை நிலையில் உள்ள மகளிருக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தி, அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு, செங்கல்பட்டு மாவட்டத்தில் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் பதிவு செய்யப்பட்டு, செயல்படுகிறது. இந்தாண்டு இச்சங்கம் புதுப்பிக்கப்பட உள்ளதால், சங்கத்தில் உறுப்பினராக சேர விரும்புவோர், செங்கல்பட்டு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகி, உரிய சந்தா தொகையை செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும், சங்கத்தின் மூலம் ஆதரவற்ற மற்றும் ஏழ்மை நிலையில் உள்ள பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில், சிறுதொழில் புரியவும், மருத்துவம் மற்றும் கல்வி உதவித்தொகை வழங்குதல், சுயதொழில் செய்ய பயிற்சி அளித்தல் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. இந்த உதவி பெற விரும்புவோர், செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகி, மனு கொடுத்து விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது
بحث هذه المدونة الإلكترونية
الثلاثاء، أكتوبر 26، 2021
Comments:0
இஸ்லாமிய பெண்களுக்கு கல்வி உதவித்தொகை: கலெக்டர் அறிக்கை
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.